#HappyBirthdayDhanush திறமைசாலி, உழைப்பாளி, சிறந்த நடிகர்.. தனுஷை கொண்டாடும் ரசிகர்கள்
சென்னை: சுள்ளான் தனுஷின் 33வது பிறந்தநாளான இன்று #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
தனுஷ் தனது 33வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். கோலிவுட்டில் ஆரம்பித்து பாலிவுட் வரை சென்று தனுஷ் நடிப்பில் அசத்திவிடுவார் என்று பெயர் எடுத்துள்ளார். ஜிம் பாடியை காட்டி மிரட்டும் பாலிவுட் நடிகர்களை தனது நடிப்பால் அசர வைத்தவர்.
இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி பலர் அவருக்கு ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். இதனால் #HappyBirthdayDhanush என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் டிரெண்டாகியுள்ளது.
ஆதித்
பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் தனுஷ் சார். எனக்கு ஆதரவாக இருப்பதற்கு நன்றி என நடிகர் ஆதித் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். #HappyBirthdayDhanush
வாழ்த்துக்கள்
வெற்றியின் போது ஒட்டிகொண்டவர்கள் அல்ல என் ரசிகர்கள் தோல்வியின் போது தட்டி கொடுத்தவர்கள் #HappyBirthdayDhanush
திறமையானவர்
கடின உழைப்பாளி மற்றும் மிகவும் திறமைசாலியான தனுஷுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். #HappyBirthdayDhanush
விக்ரம் ரசிகர்கள்
தனுஷ் சாருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் என சீயான் விக்ரம் ரசிகர்கள் வாழ்த்தியுள்ளனர். #HappyBirthdayDhanush - team #CVF
சிறந்த நடிகர்
தற்போதைய தலைமுறை ஹீரோக்களில் இந்தியாவின் சிறந்த நடிகர் தனுஷ். பிறந்தநாள் வாழ்த்துக்கள் #HappyBirthdayDhanush


Click it and Unblock the Notifications











