கிரிக்கெட் ‘தல’.. வரிந்து கட்டி வாழ்த்தும் சினிமா பிரபலங்கள்.. டிரெண்டாகும் #HappyBirthdayDhoni

சென்னை: கிரிக்கெட் 'தல' தோனிக்கு இன்று பிறந்தநாள். கிரிக்கெட் பிரபலங்கள் மற்றும் ரசிகர்களே வாயடைத்துப் போய் பார்க்கும் அளவுக்கு அனிருத் முதல் அனைத்து சினிமா பிரபலங்களும் வரிந்து கட்டி வாழ்த்தி தெறிக்கவிட்டு வருகின்றனர்.

ஏழாமாசம் ஏழாம் தேதியில் பிறந்த ஏழாம் நம்பர் ஆட்டக்காரன் தோனிக்கு இன்று 39வது பிறந்தநாள்.

சச்சினுக்கு அப்புறம் ஒரு கிரிக்கெட் வீரருக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் ஹாஷ்டேக் போட்டு வாழ்த்துகிறது என்றால் அது இந்த சென்னை சூப்பர் கிங்ஸ் சிங்கத்துக்குத் தான்.

கேப்டன் கூல்

எந்த ஒரு அசாதாரண சூழலையும் சாதாரணமாக மாற்றி சாதனை படைக்கும் தோனியை 'கேப்டன் கூல்' என்றே அனைவரும் அழைக்கின்றனர். இசையமைப்பாளர் அனிருத், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் டைட்டில் ஸ்டைல் டிசைன் போல ‘கேப்டன் கூல்' என தோனிக்கு அசத்தலான ஒரு பர்த்டே வீடியோவை வெளியிட்டு ரசிகர்கள் சார்பாக வாழ்த்தி இருக்கிறார்.

வரலக்‌ஷ்மி வாழ்த்து

வரலக்‌ஷ்மி வாழ்த்து

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டி நடக்காத வருத்தத்தை விட தல தோனியின் ஆட்டத்தை காண முடியவில்லையே என்ற வருத்தம் தான் பல ரசிகர்களுக்கும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக திகழும் எம்.எஸ். தோனிக்கு அவரது தீவிர ரசிகையான நடிகை வரலக்‌ஷ்மி சரத்குமார், தல தோனி டீசர்ட் அணிந்து கொண்டு சேப்பாக்கம் மைதானத்தில் எடுத்த புகைப்படத்துடன் வாழ்த்து கூறியுள்ளார்.

காமன் டிபி

காமன் டிபி

நடிகர்கள் அஜித், விஜய், சூர்யா, தனுஷ் பிறந்தநாளுக்கு மட்டுமல்ல, நாங்க தல தோனி பிறந்தநாளுக்கும் வித விதமா காமன் டிபி வெளியிட்டு கெத்துக் காட்டுவோம் என ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர். தோனியின் பிறந்தநாள் சிறப்பு காமன் டிபியை நடிகர் பிரேம்ஜி தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு, கிரிக்கெட் வீரர் தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார்.

தல தோனி

தல தோனி

ஏஜிஎஸ் சினிமாஸ் சார்பிலும் தல தோனிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியையும், மஞ்சள் நிற ஜெர்ஸியில் கிரிக்கெட் வீரர் தோனியையும் மிஸ் பண்ணுகிறோம் என பதிவிட்டுள்ளனர். விஜய் ரசிகர்கள் பலரும், அந்த ட்வீட்டுக்கு கீழே தோனி பிறந்தநாளுக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.

கிரண் வாழ்த்து

கிரண் வாழ்த்து

'தல' அஜித் கூட வில்லன் படத்தில் நடித்த நடிகை கிரண், கிரிக்கெட் ‘தல' தோனிக்கு தனது பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். ஹேப்பி பர்த்டே மிஸ்டர் கூல், எப்போதுமே நீங்க தான் கேப்டன், பலருக்கும் இன்ஸ்பிரேஷனா இருந்து வரீங்க என தோனியின் செம க்யூட்டான புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்தியுள்ளார். இந்தியா முழுவதும் மேலும் பல பிரபலங்களும், ரசிகர்களும் தோனியை வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X