தலைவி ஓவியாவுக்கு பிறந்தநாள்.. கெத்துக் காட்டும் ஆர்மி.. டிரெண்டான #HappyBirthdayOviya

சென்னை: தமிழ், மலையாள திரையுலகை கலக்கி வரும் நடிகை ஓவியாவின் 29வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மலையாள நடிகையான ஓவியா, இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் விமல் நடிப்பில் வெளியான களவாணி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

உலகநாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட ஓவியாவுக்கு தனி ரசிகர் ஆர்மியே உருவானது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே.

ஹேப்பி பர்த்டே

ஹேப்பி பர்த்டே

கேரளாவின் திரிசூரில் 1991ம் ஆண்டு ஏப்ரல் 29ம் தேதி பிறந்த நடிகை ஓவியா ஹெலன் இன்று தனது 29வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஒவியாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் ஓவியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.

அறிமுகம்

அறிமுகம்

கடந்த 2007ம் ஆண்டு மலையாள இயக்குநர் ராஜபாபு இயக்கத்தில் பிருத்விராஜ் நடிப்பில் வெளியான கங்காரு படத்தில் சூசனா எனும் ரோலில் நடிகை ஓவியா சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து அபூர்வா, புதியமுகம் உள்ளிட்ட மலையாள படங்களில் நடித்து வந்த ஓவியாவின் புகைப்படத்தை இணையத்தில் பார்த்த இயக்குநர் சற்குணம் களவாணி படத்தில் ஓவியாவை ஹீரோயினாக்கினார்.

ஹிட் படங்கள்

ஹிட் படங்கள்

நடிகை ஓவியா நடிப்பில் தமிழில் வெளியான முதல் படமே அவருக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான கலகலப்பு, மூடர் கூடம், மதயானை கூட்டம், யாமிருக்க பயமே, காஞ்சனா 3 உள்ளிட்ட படங்கள் மக்களிடையே வரவேற்பையும் பாக்ஸ் ஆஃபிஸ் வசூலையும் பெற்றன.

ஓவியா ஆர்மி

ஓவியா ஆர்மி

நடிகை ஓவியா நடிப்பில் வெளியான சில படங்கள் படுதோல்வியை சந்தித்த நிலையில், ஓவியாவின் மார்க்கெட் கிடுகிடுவென சரிய தொடங்கியது. சினிமாவில் மார்க்கெட் இல்லாததால், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு, போலியாக நடிக்காமல் ஓவியா இருந்தது அவருக்கு ரசிகர்களின் ஆர்மியையே உருவாக்கி தந்தது.

ஆரவ்வுடன் காதல்

ஆரவ்வுடன் காதல்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளரான நடிகர் ஆரவ்வுக்கும் ஓவியாவுக்கும் காதல் ஏற்பட்டது போன்ற காட்சிகள் பிக்பாஸ் வீட்டில் தாராளமாக அரங்கேறின. மருத்துவ முத்தம், காதல் தற்கொலை என சென்ற அந்த காதல், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு எல்லாமே வெறும் டிராமா தான் நாங்க ரெண்டு பேரும் வெறும் ஃபிரெண்ட்ஸ் தான் என்ற அறிவிப்புடன் முடிந்தது.

ஹீரோயின் சென்ட்ரிக்

ஹீரோயின் சென்ட்ரிக்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு தனக்கு கிடைத்த செல்வாக்கை பயன்படுத்தி நயன்தாரா, திரிஷா, கீர்த்தி சுரேஷ் போல ஹீரோயின் சென்ட்ரிக் படத்தை பண்ணலாம் என்ற முடிவுக்கு வந்த நடிகை ஓவியா, அடல்ட் படமான 90 எம்.எல். படத்தில் நடித்திருந்தார். ஆனால், அந்த படமும் சரிவர போகாததால், ஓவியாவுக்கு இன்னுமொரு நல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.

டிரெண்டிங்

டிரெண்டிங்

நடிகை ஓவியாவின் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக ட்விட்டரில் #HappyBirthdayOviya என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி ஓவியா ஆர்மியினர் தெறிக்கவிட்டு வருகின்றனர். ஓவியாவின் புகைப்படங்கள், காமன் டிபி, மாஷ் அப் என வழக்கம் போல பர்த்டே ஸ்பெஷல் அலப்பறைகளை அசத்தலாக செய்து வாழ்த்து மழைகளை பொழிந்து வருகின்றனர்.

Recommended Video

Rx100 Payal Rajput extremely Glamour Dance | RX 100 Karthikeya
சிரிப்பழகி

சிரிப்பழகி

விளம்பர படங்கள், கடை திறப்பு விழாக்கள், மாடலிங் என பலவற்றிலும் நடிகை ஓவியா கலக்கி வருகிறார். தன்னுடைய கள்ளம் கபடமற்ற சிர்ப்பழகாலும், அந்த மலையாள வாசத்தாலும் தனது ரசிகர்களை எப்போதும் கட்டிப் போட்டு வைத்திருக்கும் மாய வித்தை அறிந்து வைத்திருக்கிறார் ஓவியா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X