அந்த 7ஜி ரெயின்போ காலனிக்குள் இந்த ஆயிரத்தில் ஒருவன் இருப்பார்.. ஹேப்பி பர்த்டே செல்வராகவன் சார்!

சென்னை: காதல் படமானாலும் சரி, கல்ட் படமானாலும் சரி தனது தனி முத்திரையை பதித்து, ஆயிரத்தில் ஒருவனாக நிற்கும் இயக்குநர் செல்வராகவனின் 43வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.

Recommended Video

Get Set Go... Selvaraghavan next script | Ayirathil Oruvan 2 | Pudupettai 2

துள்ளுவதோ இளமை படத்தில் தனது தந்தையின் கரம் பிடித்து அவரை முன்னால் அழைத்துச்சென்ற செல்வராகவன், தனது தம்பி தனுஷுக்கு தமிழ் சினிமாவில் நிரந்தர இடத்தை பிடிக்க, தனது தோள்களை கொடுத்து தூக்கி விட்டவர்.

ஃபிலிம் மேக்கிங்கில் தனது புத்திகூர்மையை வெளிப்படுத்தும் ஜீனியஸ் செல்வராகவனின் பிறந்த நாளை தமிழ் ரசிகர்கள் ஹாஷ்டேக்குகளை உருவாக்கி டிரெண்ட் செய்து வருகின்றனர்.

காதல் படங்கள்

காதல் படங்கள்

90ஸ் கிட்ஸுக்கு இன்றளவும் செல்வராகவனின் பல காதல் படங்கள் தான் எவர் க்ரீனாக இருக்கிறது. காதல் கொண்டேன் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவனின் சைக்கோ தனமான காதல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அவர் இயக்கிய 7ஜி ரெயின்போ காலனி, இன்னும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், காதல் காவியமாக திகழும்.

கேங்ஸ்டர்

கேங்ஸ்டர்

காதல் மட்டுமின்றி எந்த ஜானரிலும் படம் எடுக்கும் திறமை தனக்கு இருக்கிறது என புதுப்பேட்டை படத்தை இயக்கியதன் மூலம் நிரூபித்தார் செல்வராகவன். ஒல்லியான தனுஷ் எல்லாம் கேங்ஸ்டரா? என சிரித்த ரசிகர்களை, தனது படைப்பின் மூலமாக சிறை பிடித்தார் செல்வராகவன். தனுஷுக்கும் தரமான சம்பவமாக அந்த படம் இன்றளவும் பேசப்படுகிறது.

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன்

பருத்தி வீரனில் காட்டுத் தனமான இளைஞனாக பார்த்த கார்த்தியை, பக்கா லோக்கல் இளைஞனாகவும், வரலாற்று மாவீரனாகவும் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் மூலம் மாற்றி காட்டியவர் செல்வராகவன். குறைந்த பட்ஜெட்டில் பாகுபலி படத்திற்கெல்லாம் முன்னோடி படமாக 2010ம் ஆண்டிலேயே ஆயிரத்தில் ஒருவனை இயக்கி இருந்தார் செல்வராகவன்.

லக் இல்லை

லக் இல்லை

ஜீனியஸ் இயக்குநராக செல்வராகவன் அறியப்பட்டாலும், அவரது பல படங்கள் தற்போது, அதன் மேக்கிங்கிற்காகவும், திரைக்கதைக்காகவும் பேசப்பட்டாலும், பாராட்டுக்களை அள்ளினாலும், சில படங்களை தவிர்த்து பெரும்பாலும், அவர் இயக்கத்தில் வெளியான பல படங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் வெற்றியை குவிக்கவில்லை. சினிமாவில் தனுஷுக்கு கிடைத்த லக், அவரது அண்ணன் செல்வராகவனுக்கு கிடைக்கவில்லை.

ஜீனியஸ் கார்த்தி

விண்ணைத் தாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் தமிழ் சினிமாவில் ரொமான்டிக் படங்கள் என்றாலே நாயகனுக்கு கார்த்தி என்ற பெயரை வைத்து விடுவார்கள். மயக்கம் என்ன படத்திலும், நடிகர் தனுஷ் கார்த்தி எனும் கதாபாத்திரத்தில் தான் நடித்திருப்பார். ஆனால், அவர் செல்வராகவனின் ஜீனியஸ் கார்த்தி.

மாஸ்டர் மைண்ட்

இயக்குநர் செல்வராகவனின் 43வது பிறந்த நாளை சமூக வலைதளங்களில் அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, 7ஜி ரெயின்போ காலனி உள்ளிட்ட வித்தியாசமான படங்களை தமிழ் சினிமாவில் இயக்கிய மாஸ்டர் மைண்ட் செல்வராகவன் சாருக்கு பிறந்த நாள் என வாழ்த்தி வருகின்றனர்.

புது ஃபார்முலாவே உருவாக்கினார்

தனது அண்ணன் செல்வராகவன் குறித்து, நடிகர் தனுஷ் அளித்த பேட்டியில், படிக்கும் போது, கணக்கு தேர்வின் போது, கணக்கில் ஒரு புதிய ஃபார்முலாவே உருவாக்கி அந்த பதிலை கொண்டு வந்தார் செல்வராகவன். அவர் செம ஜீனியஸ். விளையாட்டிலும், மற்றவர்களை வீழ்த்தக் கூடியவர் என தனுஷ் அளித்த பேட்டி வீடியோ வைரலாகி வருகிறது.

சூர்யா ரசிகர்கள்

புதுப்பேட்டை படத்தைத் தொடர்ந்து, அப்படி ஒரு ஏரியாவில் மீண்டும் சூர்யாவின் என்.ஜி.கேவில் அரசியல் கலந்து புகுந்து விளையாடி இருப்பார் இயக்குநர் செல்வராகவன். செல்வராகவனின் பிறந்த நாளை முன்னிட்டு, சூர்யா ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். என்.ஜி.கே 2வது பாகத்திற்காகவும் வெயிட்டிங்காம்..

எப்போதும் மாஸ் தான்

காதல், கேங்க்ஸ்டர், வரலாறு, கனவு, ஃபேண்டஸி, அரசியல் என பல ஏரியாக்களில் திரைக்கதை அமைத்து இயக்கும் திறன் கொண்ட இயக்குநர்களில் செல்வராகவனுக்கு தமிழ் சினிமாவில் நிச்சயம் தனி இடமும் ரசிகர்கள் கூட்டமும் எப்போதும் இருக்கும். செல்வராகவன் இயக்கத்தில் அடுத்து ஆயிரத்தில் ஒருவன் 2 அல்லது புதுப்பேட்டை 2 படத்துக்காக ரசிகர்கள் வெயிட்டிங்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X