மல்டி டேலன்ட் ஸ்ருதி ஹாசனுக்கு ஹேப்பி பர்த்டே.. டிரெண்டாகும் ஹாஷ்டேக்.. குவிகிறது வாழ்த்து மழை!
சென்னை: நடிகை ஸ்ருதி ஹாசனின் 34வது பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.
கோலிவுட், டோலிவுட், பாலிவுட் என பல இந்திய மொழிகளில் நடித்து அசத்தியுள்ள நடிகை ஸ்ருதி ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு #HappyBirthdayShrutiHaasan என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி கோலிவுட் மற்றும் டோலிவுட் ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
உலக நாயகன் கமல்ஹாசனின் மகளான ஸ்ருதி ஹாசன் நடிப்பு, பாடல், நடனம், தயாரிப்பு என பன்முகத் திறமை கொண்டவர்.

34 வயதினிலே
கமல்ஹாசன் - சரிகா தம்பதியினருக்கு மூத்த மகளாக 1986ம் ஆண்டு ஜனவரி 28ம் தேதி ஸ்ருதி ஹாசன் பிறந்தார். படிப்பு, நடிப்பு, பாட்டு பாடும் திறமை, டான்ஸ் என பன்முகத் திறமைகளை கொண்டவர் ஷ்ருதி ஹாசன். 2000ம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான ஹேராம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான ஸ்ருதி ஹாசன், இன்று தனது 34வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.

ஹீரோயின் என்ட்ரி
2009ம் ஆண்டு லக்கி எனும் பாலிவுட் படத்தில் நாயகியாக அறிமுகமானார். பின்னர் 2011ம் ஆண்டு ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான 7ம் அறிவு படத்தின் மூலமாக தமிழுக்கு ஹீரோயினாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து விஜய்யின் புலி, அஜித்தின் வேதாளம், சூர்யாவின் சிங்கம் 3, விஷாலின் பூஜை, தனுஷின் 3 என பல முன்னணி நடிகர்கள் படங்களில் நாயகியாக நடித்தார்.

கம்பேக்
கோலிவுட்டை போலவே டோலிவுட்டிலும் பல ஹிட் படங்களில் நடித்த ஸ்ருதி ஹாசன், காதல், காதல் தோல்வி என சினிமா வாழ்க்கைக்கு இரண்டு ஆண்டுகள் இடைவெளி விட்டிருந்தார். தற்போது மீண்டும் விஜய்சேதுபதியின் லாபம், ரவிதேஜாவின் கிராக் உள்ளிட்ட பல படங்களில் நடித்து பழையபடி கம்பேக் ஆக உள்ளார்.
தமன்னா வாழ்த்து
ஸ்ருதி ஹாசனின் 34வது பிறந்த நாளை முன்னிட்டு நடிகை தமன்னா தனது ட்விட்டர் பக்கத்தில் ஸ்ருதி ஹாசனின் பிறந்தநாள் காமன் டிபியை வெளியிட்டு என்ன ஒரு அற்புதமான நடிகை இவர் என ஸ்ருதி ஹாசனுக்கு தனது பிறந்த நாள் வாழ்த்துக்களையும் உளமாற தெரிவித்துள்ளார். இருவரும் நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மகேஷ்பாபு ரசிகர்கள்
கோலிவுட்டை போலவே டோலிவுட்டில் பல முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்துள்ள ஷ்ருதி ஹாசன், டோலிவுட் சூப்பர்ஸ்டார் மகேஷ்பாபு உடன் 2014ம் ஆண்டு ஆகாடு படத்திலும் 2015ம் ஆண்டு சூப்பர் டூப்பர் ஹிட்டான ஸ்ரீமந்துடு படத்திலும் நடித்துள்ளார். மகேஷ்பாபு மற்றும் ஸ்ருதி ஹாசனின் சூப்பர் காம்போவில் மயங்கிய மகேஷ்பாபு ரசிகர்கள் ஸ்ருதி ஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்.
மல்டி டேலன்ட்
நடிகை, பாடகி, தயாரிப்பாளர், இசையமைப்பாளர், தொகுப்பாளினி என மல்டி டேலன்ட் கொண்ட ஷ்ருதிஹாசனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என இந்த ரசிகர் ட்வீட் போட்டுள்ளார். இந்திய சினிமா துறை பிரபலங்கள் பலரும் ஸ்ருதி ஹாசனின் இந்த பன்முகத் திறமையை பாராட்டாதவர்கள் யாரும் இல்லை.
Two Blockbuster Hit Movie #7amArivu And #S3 ( #singam3 ) 🔥💥
Lots Of Love As Always From @Suriya_offl Anna Fans ♡#HBDShrutiHaasan#HappyBirthdayShrutiHaasan pic.twitter.com/BnbLMEsdUU — Ajith Suriya Trends (@Ajith_Suriya_) January 27, 2020 '>
சூர்யா ஃபேன்ஸ்
நடிகர் சூர்யாவின் 7ம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான ஸ்ருதி ஹாசன், மீண்டும் சூர்யாவுடன் சிங்கம் 3 படத்திலும் ஜோடி போட்டு நடித்திருந்தார். இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் நடிகை ஸ்ருதி ஹாசனுக்கு சூர்யா ஃபேன்ஸ் சார்பாக பல சூர்யா ரசிகர்களும் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











