For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  அகரம் தந்த சிகரம்.. அன்பான நாயகனுக்கு ஹேப்பி பர்த்டே.. டிரெண்டாகும் #HappyBirthdaySuriya

  |

  சென்னை: நடிப்பின் நாயகன், அகரம் தந்த சிகரம், அன்பான நாயகன் என பல செல்லப்பெயர்களால் அழைக்கப்படும் திறமையான நடிகர் சூர்யாவின் 45வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

  Suriya Birthday CDP detailed • Soorarai Pottru

  பழம்பெரும் நடிகர் சிவக்குமாரின் மகன் சூர்யா என்ற பெயர் மாறி, சூர்யாவின் அப்பா சிவக்குமார் என அழைக்கப்படும் அளவுக்கு தனது விடாமுயற்சியால் வளர்ந்து உள்ளார் சூர்யா.

  நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்தே கொண்டாடி வரும் அவரது ரசிகர்கள், தற்போது #HappyBirthdaySuriya என்ற ஹாஷ்டேக்கை பல மில்லியன் ட்வீட்களுடன் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

  மிஸ்டர் பெர்ஃபெக்ட்

  மிஸ்டர் பெர்ஃபெக்ட்

  நல்லா டான்ஸ் ஆட மாட்றீங்க, நல்லா நடிக்க வரல, நீங்கலாம் ஹீரோ மெட்டிரீயல் கிடையாது என பல அவமான பேச்சுகளை கேட்டு, துவண்டு போகாமல், வெறி கொண்ட சிங்கமாக சீறிப் பாய்ந்து, எதுவெல்லாம் தனக்கு வராது என ஏளனம் பேசினார்களோ, அதை விட தன்னால் சாதித்துக் காட்ட முடியும் என கடின உழைப்பை போட்ட சூர்யா எப்போதுமே மிஸ்டர் பெர்ஃபெக்ட் தான்.

  நடிப்பின் நாயகன்

  நடிப்பின் நாயகன்

  கோலிவுட் பாக்ஸ் ஆஃபிஸ் கிங்காக விஜய், அஜித் இருக்கும்போதே இருவருக்கும் சமமாக டஃப் கொடுக்கும் அளவுக்கு பல பிளாக்பஸ்டர்களை கொடுத்து அயனாகவும், சிங்கமாகவும் கர்ஜித்து, வெற்றி நடை போட்டு வருகிறார் சூர்யா. மாஸ் நடிப்பை விட, நந்தா, பிதாமகன், 24, கஜினி, பேரழகன், என்.ஜி.கே என நடிகராகவும் தன்னை நிரூபித்துக் காட்டிய நடிப்பின் நாயகன் சூர்யாவின் பிறந்தநாளை அவரது ரசிகர்கள் வேற லெவலில் கொண்டாடி வருகின்றனர்.

  வில்லனாகவும்

  வில்லனாகவும்

  ஹீரோவாகவே நடித்து வந்த சூர்யா தன்னால், மிரட்டல் வில்லன் ஆத்ரேயாவாகவும் நடித்து அசத்த முடியும் என 24 படத்தில் நடித்து காட்டினார். விஞ்ஞானியாகவும், வில்லனாகவும், ஹீரோ என மூன்று வேடங்களில் ஒரே படத்தில் சிறப்பான நடிப்பை வெளிகாட்டி அசத்தியிருந்தார். டைம் மெஷின் சம்பந்தமான இந்த பிரம்மாண்ட படம் சர்வதேச கவனத்தை ஈர்த்தது குறிப்பிடத்தக்கது.

  100 சதவீதம்

  100 சதவீதம்

  ஒரு படம் வெற்றி பெறுவதும், தோல்வியடைவதும், எளிதில் யாராலும் தீர்மானிக்க முடியாது. அங்கு அம்பயர் ஆடியன்ஸ் தான். ஆனாலும், தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திற்காகவும் 100 சதவீத உழைப்பு போட வேண்டியது ஒரு நடிகனின் கடமை, அந்த விதத்தில் சூர்யாவின் ஈடுபாட்டை யாராலும் குறை சொல்லவே முடியாது.

  பேரழகன்

  பேரழகன்

  தந்தை சிவக்குமாரே திரையுலக மார்க்கண்டேயன் எனும் பெயர் எடுத்தவர். பேரழகனாக நடித்த சூர்யாவின் அழகு தமிழ் சினிமா ரசிகர்களை மெய் மறக்கவே செய்து வருகிறது. லோக்கல் ஆறாகவும் தன்னால் நடிக்க முடியும், சஞ்சய் ராமசாமியாகவும் தன்னால் நடிக்க முடியும் என படத்துக்கு படம், லுக்கையும், கெட்டப்பையும் எப்படி மாற்றினாலும் சூர்யாவின் சூர்ய பொழிவு என்றுமே மங்கியது இல்லை.

  கல்வி தான் எல்லாமே

  கல்வி தான் எல்லாமே

  பசியால் வாடுபவனுக்கு ஒரு வேளை மீனை கொடுக்காமல், அவன் வாழ்க்கை முழுவதும் பசியால் வாடாமல் இருக்க மீன் பிடிக்க கற்றுத் தருவதை போல, ஏழ்மையில் வாடும் எண்ணற்ற மாணவர்களுக்கு அகரம் அறக்கட்டளை மூலமாக கல்வி கொடுத்து வரும் சூர்யாவின், நல்ல உள்ளம் என்றுமே நல்லா இருக்கும். ஹேப்பி பர்த்டே சூர்யா சார்!

  English summary
  South Indian stylish actor Suriya’s birthday celebrating today. His fans create hashtag and make it as a world level trending.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X