HappybirthdaySurya: இந்திய சினிமாவின் நிஜகஜினிக்கு ‘லாங் லிவ்வு.. ஹேப்பி லைப்பு’! ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் சூர்யாவின் 44வது பிறந்தநாள் இன்று.

சென்னை: நடிகர் சூர்யாவுக்கு சக நடிகர், நடிகையர் பலர் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தனது 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். அவருக்கு திரைத்துறையை சேர்ந்தவர்களும், ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை சமூகவலைதளப் பக்கங்கள் வாயிலாகத் தெரிவித்து வருகின்றனர்.

தேசிய கல்விக் கொள்கை பற்றிய பேச்சு, காப்பான் இசை வெளியீட்டு விழா என கடந்த சில நாட்களாகவே சூர்யாவின் பெயர் ஊடகங்களில் அடிபட்டு வருகிறது. தற்போது, அதில் அவரது பிறந்தநாளும் சேர்ந்து விட்டது. எனவே, அவரது ரசிகர்கள் டிவிட்டரில் #Happy birthday Surya என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, டிரெண்டிங் ஆக்கியுள்ளனர்.

நக்மா வாழ்த்து:

ஜோதிகாவின் சகோதரியும், நடிகையுமான நக்மா சூர்யாவிற்கு டிவிட்டர் வாயிலாக பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். அதில், 'சந்தோசமான, அமைதியான, வெற்றிகரமான, ஆரோக்கியமான உடல்நிலையைப் பெற்று வாழுங்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிக்கட்டும்' என அவர் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.சுரேஷ் வாழ்த்து:

தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் தனது டிவிட்டர் பக்கத்தில், 'என் பாசத்திற்குரிய சகோதரன் சூர்யாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார் அண்ணா' என வாழ்த்தியுள்ளார்.

இந்திய சினிமாவின் நிஜ கஜினி:

‘இந்திய சினிமாவின் நிஜ கஜினிக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள். எப்போதும் நீங்கள் ஆரோக்கியமாக இருக்க கடவுளை பிரார்த்திக்கிறேன்' என இந்த ரசிகர் வாழ்த்தியுள்ளார்.

மிகச் சிறந்த மனிதர்:

‘திறமையான நடிகராக மட்டுமல்ல, மிகச் சிறந்த மனிதராக, சமூகத்தின் மீது அக்கறை கொண்டு எதிர்கால சமூகம் முன்னேற வேண்டும் என பாடுபட்டு வரும் நடிகர் சூர்யாவுக்கு என் பிறந்தநாள் வாழ்த்துக்கள்' என இவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

நடிப்பின் நாயகன்:

நடிப்பின் நாயகன் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது காப்பான் படத்தைப் பார்க்க மிகவும் ஆவலாக இருக்கிறோம் என ராம் முத்துராம் தியேட்டர் தங்களது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்தியுள்ளனர்.

பன்முகத் திறமையாளர்:

அகரம் பவுண்டேசன் மூலம் குழந்தைகளின் கல்விக்கு பெரும் உதவி புரிந்து வரும், பன்முகத் திறமையாளரான நடிகர் சூர்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். நீங்கள் நீண்ட காலம் வாழ வேண்டும் சார் என நடிகை நிவேதா பெத்துராஜ் வாழ்த்தியுள்ளார்.

லாங் லிவ்.. ஹேப்பி லைப்:

சூர்யாவின் பிறந்தநாளுக்கு அஜித் ரசிகர்கள் வழக்கம் போல் தங்களது ஸ்டைலில், ‘லாங் லிவ்.. ஹேப்பி லைப்.. ஹேப்பி பர்த்டே சூர்யாண்ணா. எங்களுக்கு நல்ல முன்னுதாரணமாக இருப்பதற்கு நன்றி' எனத் தெரிவித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X