»   »  'தல' பிறந்தநாள்: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #HappyBirthdayThalaAjith

'தல' பிறந்தநாள்: ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #HappyBirthdayThalaAjith

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: அஜீத் பிறந்தநாளையொட்டி ஏராளமானோர் அவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து வருவதால் #HappyBirthdayThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 3வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

தல அஜீத் இன்று தனது 44வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த ஆண்டு மனைவி ஷாலினி, மகள் அனௌஷ்காவுடன் பிறந்தநாளை கொண்டாடிய அவர் இந்த ஆண்டு மகன் ஆத்விக்குடன் கொண்டாடுகிறார்.

இந்நிலையில் ஏராளமானோர் அஜீத்துக்கு ட்விட்டரில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

ட்விட்டர்

ட்விட்டர்

அஜீத் பிறந்தநாளையொட்டி ரசிகர்கள் அவருக்கு ட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனால் #HappyBirthdayThalaAjith என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் தேசிய அளவில் 3வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

அட்சயா

எந்த ஆடை அணிந்தாலும் அவருக்கு அது பொருத்தமாக இருக்கும் #HappyBirthdayThalaAjith பர்பெக்ஷனிஸ்ட்...கெத்து தல என்று அட்சயா என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

திருச்சி அஜீத் ரசிகர்கள்

திருச்சி அஜீத் ரசிகர்களின் வேற லெவல் கொண்டாட்டம்.. பெருமையாக உள்ளது... #HappyBirthdayThalaAjith என்று தெரிவித்துள்ள திருச்சி அஜீத் ரசிகர்கள் தங்கள் தல பிறந்தநாள் கொண்டாட்டத்தின் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.

விதியுலேகா ராமன்

பிறந்தநாள் வாழ்த்துக்கள்! அருமையான மனிதர்...உங்களுடன் சேர்ந்து மீண்டும் நடிக்க வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன் #HappyBirthdayThalaAjith என நடிகை விதியுலேகா ராமன் ட்வீட் செய்துள்ளார்.

ரஜினி ரசிகர்கள்

தல அஜீத்துக்கு தலைவர் ரஜினிகாந்த் ரசிகர்களின் பிறந்தநாள் வாழ்த்துக்கள்!!! #HappyBirthdayThalaAjith என்று சூப்பர்ஸ்டார் ரசிகர்கள் ட்விட்டரில் தெரிவித்துள்ளனர்.

English summary
#HappyBirthdayThalaAjith is trending in twitter in the national level as lots of fans are wishing their Thala.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil