மீம்களின் அரசனான இம்சை அரசன்.. சிரிக்க வைக்கவே பிறந்த வைகைப் புயல்.. #HappyBirthdayVadivelu

சென்னை: வடிவேல் பாலாஜியின் மறைவு காரணமாக தனது பிறந்தநாளை எப்படி கொண்டாடுவேன் என அழுத அந்த மனசு இருக்கு பார்த்தீங்களா.. அது தான் சார் கடவுள்.

வைகைப் புயல் வடிவேலுவின் 60வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது.

மீம்களின் அரசனாக விளங்கும் இம்சை அரசனின் பிறந்தநாளை ரசிகர்கள் #HappyBirthdayVadivelu என்ற ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

வைகைப் புயல்

வைகைப் புயல்

1960ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி மதுரை மண்ணில் பிறந்த சொக்கத் தங்கம் நம்ம வைகைப் புயல் வடிவேலு. குமரவடிவேல் நடராஜன் எனும் இயற்பெயர் சினிமாவில் வடிவேலுவாக பிரபலமானது. உச்ச நட்சத்திரங்களின் முகத்தை பார்க்காமல் கூட தமிழ் ரசிகர்கள் தங்கள் நாட்களை கடப்பார்கள், ஆனால், ஏதோ ஒரு ரூபத்தில் வடிவேலுவை காணாமல் கடக்க முடியாத நிலை உருவாகி உள்ளது தான் தனிச் சிறப்பே.

டிரெண்டாகும் ஹாஷ்டேக்

டிரெண்டாகும் ஹாஷ்டேக்

மீம்களின் அரசனாக மாறிவிட்ட நம்ம இம்சை அரசனின் பிறந்தநாள் ஆச்சே.. நம்ம டிரெண்டிங் பசங்க, மீம் க்ரியேட்டர்கள் சும்மாவா விடுவார்கள், நேசமணியையே சேவ் பண்ண வேண்டும் என டிரெண்ட் செய்தவர்கள், #HappyBirthdayVadivelu என்ற ஹாஷ்டேக்கை உருவாக்கி வேற லெவலில் அதகளம் செய்து வருகின்றனர்.

விஜய் ரசிகர்கள்

விஜய் ரசிகர்கள்

மதுர, வில்லு, சச்சின், காவலன், மெர்சல் என ஏகப்பட்ட படங்களில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்து அசத்தி இருப்பார் வடிவேலு. விஜய் ரசிகர்கள் அந்த படத்தின் காட்சிகளை எல்லாம் பதிவிட்டு, நடிகர் வடிவேலுவுக்கு ஹேப்பி பர்த்டே சொல்லி வருகின்றனர். ஏகப்பட்ட புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

பறக்கும் மீம்கள்

பறக்கும் மீம்கள்

இத்தனை நாள் மத்த பிரச்சனைகளுக்கும், மத்தவங்க பிறந்தநாளுக்கும் பயன்படுத்தப்பட்ட மீம்கள், இன்று வடிவேலுவின் பிறந்தநாளுக்கே வேற லெவலில் அவரது புகைப்படங்களையே வைத்து போட்டு மீம் க்ரியேட்டர்கள், தங்கள் குல தெய்வத்தை வழிபடுவதை போல வழிபட்டு வருகின்றனர்.

Recommended Video

கொரோனா.. இறைவன் ரிலீஸ் செய்த படம்.. வைரலாகும் வடிவேலுவின் வீடியோ!
மீம் க்ரியேட்டர்களின் முதுகெலும்பே

மீம் க்ரியேட்டர்களின் முதுகெலும்பே

நகைச்சுவை அரசன் வடிவேலு என அவரது பிறந்த நாளுக்காக ஸ்பெஷலாக உருவாக்கப்பட்ட இம்சை அரசன் காமன் டிபியை ஷேர் செய்து, மீம் க்ரியேட்டர்களின் முதுகெலும்பே என பிறந்தநாள் வாழ்த்துக்கள் விண்ணை பிளக்கும் அளவுக்கு கொடி கட்டி பறக்கிறது. ஏகப்பட்ட பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்தி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X