For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  வாத்தியார் முதல் மாஸ்டர் வரை.. சினிமாவில் பக்காவா பாடம் நடத்திய நடிகர்கள் #HappyTeachersDay

  |

  சென்னை: தனது பிறந்தநாளை ஆசிரியர் தினமாக கொண்டாட சொன்ன மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் சர்வ பள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாள் பல ஆண்டுகளாக ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

  ACTOR NANI EXCLUSIVE | MANI RATNAM SIR தான் என்னோட ONLINE TEACHER |V MOVIE | FILMIBEAT TAMIL

  கல்வி அறிவை போதித்து, நாளைய சமுதாயத்தை உருவாக்கும் நற்பணியை செய்து வரும் அனைத்து ஆசிரியர்களையும் இந்த நல்ல நாளில் போற்றுவோம்.

  வாத்தியார் என்றே புகழப்பட்ட எம்.ஜி.ஆர் முதல், மாஸ்டராக மாஸ் காட்டவுள்ள விஜய் வரை சினிமாவில் ஆசிரியராக கலக்கிய நடிகர்கள் பற்றி இங்கே காண்போம்.

   anikha surendran, cute photos, nayanthara அனிகா சுரேந்திரன், க்யூட் போட்டோஸ், நயன்தாரா anikha surendran, cute photos, nayanthara அனிகா சுரேந்திரன், க்யூட் போட்டோஸ், நயன்தாரா

  வாத்தியார்

  வாத்தியார்

  நாம பாடுற பாட்டும் ஆடுற ஆட்டமும் படிப்பினைத் தந்தாகணும்.. நாட்டிற்கு படிப்பினை தந்தாகணும் என தான் நடித்த பல படங்களின் மூலம் ஒழுக்கத்தையும், பண்பையும், வீரத்தையும், பாசத்தையும் கற்றுக் கொடுத்ததால் தான் நடிகர் எம்.ஜி.ஆரை பலரும் வாத்தியார் என புகழ்கின்றனர்.

  தர்மத்தின் தலைவன்

  தர்மத்தின் தலைவன்

  பக்கா சாதுவான ஆசிரியராக நடிகர் ரஜினிகாந்த் நடித்த படம் தான் தர்மத்தின் தலைவன். தமிழர்களின் பாரம்பரியமான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு, நெற்றியில் திருநீர் பட்டையை போட்டுக் கொண்டு, கல்லூரி பேராசிரியாக வகுப்பெடுத்தும், குடிக்கு அடிமையாகும் தம்பியை திருத்த கிழவனாக வேடமிட்டும் பாடம் நடத்தி இருப்பார்.

  நம்மவர்

  நம்மவர்

  இயக்குநர் சேது மாதவன் இயக்கத்தில் 1995ம் ஆண்டு வெளியான உலக நாயகன் கமல்ஹாசனின் நம்மவர் படமும் ஆசிரியர்களை பெருமை சேர்க்கும் விதமாகவே அமைந்திருக்கும். கல்லூரி மாணவர்கள் கெட்ட பழக்கத்திற்கு அடிமையாகி விடாமல், அவர்களை திருத்த போராடும் ஒரு சிறந்த ஆசிரியராக கமல் கலக்கி இருப்பார்.

  ரமணா

  ரமணா

  ஒரு ஆசிரியர் நினைத்தால், ஒரு ஊழல் அற்ற சமூகத்தையே உருவாக்க முடியும் என்றும், ஊழல் செய்யும் நபர்களை தண்டிக்கவும் முடியும் என்றும் ரமணா படத்தை இயக்கி ஒரு புரட்சியையே வெடிக்கச் செய்திருப்பார் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ். கேப்டன் விஜயகாந்த்தின் நடிப்பு பற்றி சொல்லத் தேவையே இல்லை, தனக்கு இப்படியொரு தீர்ப்பை எழுதுங்கள் என நீதிபதிக்கே கிளைமேக்ஸில் பாடம் நடத்தும் காட்சிகள் வேற லெவல்.

  வாகை சூடவா

  வாகை சூடவா

  செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக இருக்கும் குழந்தைகளுக்கு கல்வி கற்றுத் தரும் ஆசிரியராக வாகை சூடவா படத்தில் நடித்து நடிகர் விமல் அசத்தி இருப்பார். கல்வி தான் ஏழ்மையை ஒழிக்கும் என்ற நம்பிக்கையுடன், பல துன்பங்களை சந்தித்து போராடும் ஆசிரியராக நடித்து இருப்பார். இயக்குநர் சற்குணம் இயக்கிய அந்த படம் தேசிய விருதையும் தட்டிச் சென்றது குறிப்பிடத்தக்கது.

  சாட்டை

  சாட்டை

  பள்ளிப் படிப்பை மையமாக வைத்த படங்கள் என்றாலே, தனியார் பள்ளிகளையே காட்டி வந்த நிலையில், அரசு பள்ளி மாணவர்களின் வாழ்க்கையையும், அவர்களுக்கு கல்வியை எப்படி சொல்லித் தர வேண்டும் என்றும் சமுத்திரகனி எடுத்த சாட்டை அழகா சொல்லிக் கொடுத்திருக்கும். இயக்குநர் அன்பழகன் இயக்கத்தில் வெளியான அந்த படம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பாராட்டுக்களை அள்ளி குவித்தது.

  மாஸ்டர்

  மாஸ்டர்

  நண்பன் படத்தில் மாணவனாக நடித்து இருந்தாலும், தலைமை ஆசிரியர் சத்யராஜுக்கே பாடம் நடத்தும் ஆசானாக நடிகர் விஜய் நடித்து இருப்பார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி உள்ள மாஸ்டர் படத்திலும், நடிகர் விஜய் புரொஃபஸராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வாத்தியும் என்ன வித்தையை சொல்லிக் கொடுக்க போறாரு என்பதை காண காத்திருப்போம். அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்!

  English summary
  Teachers Day Special: From MGR to Vijay, Kollywood actors who portrays the teacher roles in their movies list is here.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X