'அம்மாவை'யே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா?: ஆர்த்தி கொந்தளிப்பு
Recommended Video

சென்னை: அம்மாவையே கொலை செய்தவர்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளார் ஆர்த்தி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் 13 பேர் பலியாகினர். அப்பாவி மக்கள் பலியாகியுள்ளதை பார்த்து தமிழக மக்கள் கோபத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக பொது மக்களும், திரையுலக பிரபலங்களும் தமிழக அரசை கேள்வி எழுப்பியுள்ளனர்.
ஆர்த்தி
அம்மாவையே கொன்னவங்களுக்கு சாமான்ய மக்களை கொல்வது கஷ்டமா என்று நடிகை ஆர்த்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
கோபம்
தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டுள்ளதை பார்த்து ஆர்த்தி கடும் கோபத்தில் இருப்பதையே இந்த ட்வீட் உணர்த்துகிறது.
கடுப்பு
சம்மன் அனுப்பச் சொல்லவா என்று கூறியவரிடம், என்ன பயமுறுத்துகிறாயா? ஏய் செம கடுப்புல இருக்கேன் கிளம்பிடு...இன்னும் துரோகிகளுக்கு சப்போர்ட் பண்ற வெட்கமா இல்லை?? என்று ஆர்த்தி பதில் அளித்துள்ளார்.
சுட்டுடுவாங்க
ஆர்த்தி மேடம், தமிழகத்தில் உண்மை பேசினால் சுட்டுவிடுவார்கள் என்று ஒருவர் அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications











