டைட்டில் மட்டும் அல்ல பிக் பாஸும் ஐஸ்வர்யாவுக்கே: ஆர்த்தி பொளேர்
Recommended Video

சென்னை: பிக் பாஸை செமயாக அசிங்கப்படுத்தியுள்ளார் ஆர்த்தி.
பிக் பாஸ் முதல் சீசனில் கலந்து கொண்ட ஆர்த்தி இரண்டாவது சீசன் பற்றி தொடர்ந்து விமர்சித்து வருகிறார். அதிலும் குறிப்பாக பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா மீது தனி ப்ரியம் என்பதை புரிந்து வைத்துக் கொண்டு கலாய்க்கிறார் ஆர்த்தி.
இந்நிலையில் மீண்டும் பிக் பாஸை கலாய்த்துள்ளார் ஆர்த்தி.
பிக் பாஸ்
போட்டியாளர்கள் பற்றி பார்வையாளர்கள் நினைப்பதை வீடியோவாக போட்டுக் காட்டினார் பிக் பாஸ். அதை தான் ஆர்த்தி விளாசி ட்வீட்டியுள்ளார்.
ஐஸ்வர்யா
டாஸ்க் உல்டாவா சொல்லிட்டீயேமா ஐஸ்வர்யா தத்தா நல்லா பொழச்சுப்ப...நல்லா புரிஞ்சு புரியாத மாதிரி நடிப்பு யம்மாடி. ஐஸ்வர்யா தத்தா ஆர்மி கவலைப்படாதீங்க டைட்டில், வீடு, பிக் பாஸ் எல்லாம் அவங்களுக்கு தான் என்று மரண கலாய் கலாய்த்துள்ளார் ஆர்த்தி. கலக்குங்க ஆர்த்தி...
மும்தாஜ்
பிக் பாஸ் 2 எப்படி? மொட்டை போட மும்தாஜ் வேணும். ஐஸ்வர்யா தத்தாவுக்கு முடி கட் பண்ண ஹேர்ஸ்டைலிஸ்ட் வீட்டுக்குள்ள வருவாரு அது தண்டனை?? விஜயலட்சுமிக்கு சாணி டாஸ்க்?? இதைவிடவா ஹேர்கட் மேட்டரு?? பிரமாதம் நடத்துங்க பிக் பாஸ் என்று ட்வீட் செய்துள்ளார் ஆர்த்தி. பிக் பாஸை செமயா கலாய்க்கிறீர்கள் ஆர்த்தி.

கலாய்
பிக் பாஸ் நிகழ்ச்சியின் முன்னாள் போட்டியாளர்கள் யாரும் ஆர்த்தி அளவுக்கு அவரை கலாய்த்தது இல்லை. பிக் பாஸுக்கு ஐஸ்வர்யா என்றல் மிகவும் பிடிக்கும். அதனால் தான் அவரை தொடர்ந்து காப்பாற்றி வருகிறார் என்று பார்வையாளர்கள் குற்றம் சாட்டி வருகிறார்கள். இந்நிலையில் பிக் பாஸே ஐஸ்வர்யாவுக்குத் தான் என்று ஆர்த்தி தில்லாக ட்வீட் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











