ஆளவந்தானை தெரியும் ஆளவந்தாளை உங்களுக்கு தெரியுமா?
Recommended Video

சென்னை: நடிகை ஆர்த்தி மொட்டை அடித்து புகைப்படம் எடுத்து மொட்டை பாஸ், ஆளவந்தாள் என்று தலைப்பிட்டு அதை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆர்த்தி புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு விக் செய்ய வசதியாக தனது தலைமுடியை கொடுத்துவிட்டு மொட்டை தலையாக உள்ளார்.
இந்நிலையில் அந்த மொட்டை தலை புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
மொட்டை பாஸ்
நிறைய மேக்கப்போட்டு மொட்டைத் தலையை புகைப்படம் எடுத்து மொட்டை பாஸ் என்ற தலைப்புடன் ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
கலாய்
இப்படி எல்லாம் போட்டோ போட்டு நீயே உன்னை கலாய்ச்சுக்கிட்டா நாங்க எதுக்கு இருக்கோம் என்று கேட்டவருக்கு ஆர்த்தி அளித்துள்ள பதில் ட்வீட்டில் கூறியிருப்பதாவது, முடிஞ்சா என்னோட நல்லா கலாய்ங்க என்றார்.
ஆளவந்தாள்
கண்ணாடிக்கு முன் நின்று புகைப்படம் எடுத்து அதற்கு ஆளவந்தாள் என்று தலைப்பிட்டு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி.
தல, தளபதி
மொட்டை பாஸ் ஆளவந்தாள் அடுத்து தல தளபதி ரெபரன்ஸ் என ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications