சும்மா கொடுப்பாங்களா ரூ. 50 லட்சம் துட்டு: ஆரவை கலாய்க்கும் ஆர்த்தி
Recommended Video

சென்னை: சும்மா கொடுப்பார்களா ரூ. 50 லட்சம் என்று ஆரவை கலாய்த்துள்ளார் ஆர்த்தி.
பிக் பாஸ் நிகழ்ச்சி 100வது நாளை நெருங்க நெருங்க டாஸ்க்குகள் கடினமாகிறது. டாஸ்க் செய்யும்போது போட்டியாளர்கள் காயம் அடைகிறார்கள். போட்டி மனப்பான்மையும் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் தான் அடிபட்ட ஆரவ் பிந்துவிடம் புலம்பினார்.

ரத்தம்
முதல் 50 நாட்கள் குடிச்ச பால் எல்லாம் ரத்தமாக ஓடுது. ரூ. 50 லட்சம் கிடைச்சாலும் அது உடம்புக்கே செலவு செய்ய வேண்டியது தான் போல என்று ஆரவ் புலம்பினார்.
ஆர்த்தி
ஆரவின் புலம்பல் வீடியோவை பார்த்த நடிகை ஆர்த்தி ட்வீட்டியிருப்பதாவது, பிக் பாஸ் எல்லாரையும் வெளிய வந்ததும் எல்லாத்துக்குமே தயார் படுத்தி அனுப்புறார் போல? சும்மா கொடுப்பாங்களா ரூ. 50 லட்சம்?? இன்னும் நிறைய டுவிஸ்ட் அன்ட் டர்ன் இருக்கு என்றார்.
ரூபாய்
ஐயோ !!!ஆரத்தி மேடம் நீங்க மட்டும் இப்ப அங்க இருந்துருந்தா Single paymount அம்பது லட்சத்து ஒர்ரூபா குடுத்துருப்பாங்க😣😣
சினேகன்
மேடம் உங்களின் அல்டிமேட் காமெடி சீன் இதற்கு 100 சதவீதம் மேட்ச் ஆகிறது


Click it and Unblock the Notifications











