மீம்ஸ் கிரியேட்டர்ஸ் கூட இப்படி செய்ய மாட்டாங்க ஆர்த்தி
Recommended Video
சென்னை: நடிகை ஆர்த்தி தன்னைத் தானே கலாய்த்துக் கொண்டுள்ளார்.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமும் பிரபலமான நடிகை ஆர்த்தி ட்விட்டரில் ரொம்பவே ஆக்டிவாக உள்ளார். தீவிர தல ரசிகையான அவர் மே 1ம் தேதி திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளார்.
அஜித்துக்கும் சேர்த்து கடவுளிடம் பிரார்த்தனை செய்துள்ளார்.
யானை
திருச்செந்தூர் கோவில் யானையுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஆர்த்தி. அதில் தன்னையும் ஒரு யானை என்று கலாய்த்துள்ளார்.
ஆர்த்தி
ஆர்த்தி தன்னை ஒரு யானை என்று கூறி கலாய்த்ததை பார்த்த ஒருவர் அப்படி எல்லாம் சொல்ல வேண்டாம் என்று அக்கறையுடன் கமெண்ட் போட்டுள்ளார்.
அழகு
ஆர்த்தியின் ட்வீட்டை பார்த்த ஒருவர் இப்போ தான் வெள்ளை யானையை பார்க்கிறேன், க்யூட் என்று தெரிவித்துள்ளார்.
விமர்சனம்
ஏன் இப்படி உங்களை நீங்களே கலாய்க்கிறீர்கள் என்று சிலர் பாசத்துடன் கேட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











