யக்கா இது பரமக்குடி கலவரம், தூத்துக்குடி அல்ல: வீடியோ வெளியிட்ட ஆர்த்தியை கலாய்க்கும் நெட்டிசன்ஸ்
சென்னை: வயதானவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி போராடிய மக்களை நோக்கி போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் பலியாகினர்.
மேலும் பொது மக்களை போலீசார் விரட்டி விரட்டி அடித்துள்ளனர்.
ஆர்த்தி
வயதானவர் ஒருவரை போலீசார் அடித்து நொறுக்கும் வீடியோவை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.
பரமக்குடி
ஹய்யோ ஆர்த்தி, இது தூத்துகுடி அல்ல கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பரமக்குடியில் நடந்தது. தவறான வீடியோவை வெளியிட்டுள்ளீர்கள் என்று நெட்டிசன்கள் தெரிவித்துள்ளனர்.
மரியாதை
அப்பா வயதுக்காரரை இப்படி அடித்துள்ளார்களே என்று சிலர் கோபப்பட்டுள்ளனர். எப்ப எடுத்த வீடியோவாக இருந்தால் என்ன அடிப்பது போலீஸ் தானே என்கிறார்கள் சிலர்.
தூங்கிட்டீங்களா
அக்கா என்ன தூங்கிட்டீங்களா, இது பரமக்குடி கலவரம் தூத்துக்குடி அல்ல என்று பலரும் தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











