ப்ப்ப்ப்ப்பா...: செம செல்ஃபியை வெளியிட்ட ஆர்த்தி
சென்னை: மஞ்சள் பூசி கும்குமம் வைத்து எடுத்த புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் நடிகை ஆர்த்தி.
பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பலரின் கோபத்திற்கு ஆளான நடிகை ஆர்த்தி தனது தலைமுடியை ஒரு நல்ல காரியத்திற்காக தானமாக கொடுத்து மக்களின் மனதை வென்றுவிட்டார்.
இந்நிலையில் அவர் தனது செல்ஃபியை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
மஞ்சள்
முதல் முறையாக மஞ்சள், லிப்ஸ்டிக், காஜல் மட்டுமே பயன்படுத்தி மேக்கப் போட்டுள்ளார் ஆர்த்தி. அந்த எக்ஸ்ட்ரா அழகு வீணாகிவிடக் கூடாது என்று நினைத்து ஒரு செல்ஃபி அதுவும் ரொம்ப க்ளோசப்பில் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
ஆனால்
மஞ்சள் பூசி அழகாக இருக்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் க்ளோசப்பை குறைத்திருக்கலாம். திடீர்னு பார்க்கும்போது பகீர்னு இருக்கு என்று நெட்டிசன்ஸ் தெரிவித்துள்ளனர்.
சேட்டை
ஒரு சேட்டைக்காரர் பரதேசி பட ஸ்டில்லை போட்டு ஆர்த்தியை கலாய்த்துள்ளார்.

தசைநார்
ஆர்த்திக்கு காலில் தசைநார் கிழிந்து பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதற்காக அவர் காலில் பேன்டேஜ் போட்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் அவர் ட்விட்டரில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











