அப்போ, அடுத்த ரெய்டு பிக் பாஸ் ஆர்த்தி வீட்டிலா? #Mersal
சென்னை: மெர்சல் விவகாரம் தொடர்பாக நடிகை ஆர்த்து நச்சுன்னு கேள்வி கேட்டுள்ளார்.
மெர்சல் படத்தில் விஜய் ஜி.எஸ்.டி., டிஜிட்டல் இந்தியா உள்ளிட்டவை பற்றி பேசிய வசனங்களுக்கு பாஜக கடும் எதிர்ப்பு தெரிவித்தது. அந்த காட்சிகளை நீக்க வேண்டும் என்று அடம்பிடித்தது.
மெர்சலுக்கு பாஜக கொடுத்த பிரச்சனை தேசிய அளவில் பேசப்படுகிறது. கடந்த வியாழக்கிழமையில் இருந்து மெர்சல் விவகாரம் தான் ஹாட் டாபிக்காக உள்ளது.

காட்சி
2.5 மணிநேரம் ஓடக்கூடிய திரைப்படத்தில் உங்களுக்கு பிடிக்காத காட்சியை நீக்க சொல்லி நீக்கவும் வைக்கிறீங்க...
ஆனால் ஐந்து வருடம் ஆளுகிற எங்களுக்கு பிடிக்காத எம்.பி.யும், எம்.எல்.ஏ.வும் நீக்க சொன்னா எங்களை தேச விரோத சக்திகள் என்று சொல்லுறீங்க...என்னாங்க உங்க நியாயம்...என ட்வீட்டியுள்ளார் ஆர்த்தி.
ஆர்த்தி
நெக்ஸ்ட் ரைடு உங்க வீட்டுல தான் என்று ஒருவர் கமெண்ட் போட்டுள்ளார்.
தைரியம்
பேசாம நீ அரசியலுக்கு வந்துடும்மா. சினிமா துறையில் பல பேர்க்கு இல்லாத தைரியம் உனக்கு இருக்கு.
அக்கா
அக்கா உங்க வீட்டிற்கு ரெய்டு வந்துவிட போறாங்க..அமைதியாக இருங்க ஆர்த்தி அக்கா


Click it and Unblock the Notifications











