முதலில் விஸ்வாசம், அப்புறம் தான் பேட்ட: பங்காளிஆர்த்தி
சென்னை: பொங்கலுக்கு முதலில் விஸ்வாசம் படத்தை பார்க்கப் போவதாக நடிகை ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கலுக்கு ரஜினி நடித்துள்ள பேட்ட மற்றும் அஜித்தின் விஸ்வாசம் ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இரண்டு படங்களின் ட்ரெய்லர்களும் மாஸாக இருக்கின்றன.

ட்ரெய்லர் தொடர்பாக சமூக வலைதளங்களில் பெரிய சண்டையே நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பொங்கலுக்கு விஸ்வாசம், பேட்ட ஆகிய படங்களில் எதை முதலில் பார்ப்பீர்கள் என்று நடிகை ஆர்த்தியிடம் கேட்கப்பட்டது.

தல ரசிகையான அவர் சற்றும் யோசிக்காமல் விஸ்வாசம் படத்தை தான் முதலில் பார்ப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பொங்கலுக்கு அடிச்சிதூக்க பங்காளிகள் அனைவரும் தயாராகிவிட்டனர்.
Comments


Click it and Unblock the Notifications