விஜய் சேதுபதிக்கு போட்டியாக ஹீரோவாக நடிக்கும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்!
சென்னை : கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழில் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் நடித்து ஹீரோவாக அறிமுகமாகிறார்.
லாஸ்லியா, அர்ஜுன் ஆகியோர் இதில் நடித்திருக்க படம் மிக விரைவிலேயே வெளியாக உள்ளது.
இந்த நிலையில் விஜய்சேதுபதிக்கு போட்டியாக சூப்பர் ஹிட் திரைப்படத்தின் ரீமேக்கில் ஹர்பஜன்சிங் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்
எந்த கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அதை தனது இயல்பான நடிப்பின் மூலம் வெற்றி பெற செய்பவர் நடிகர் விஜய் சேதுபதி. இவர் நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே மினிமம் கேரன்டி என இருக்கும் நிலையில் பல தயாரிப்பாளர்களும் இவரது கால்ஷீட்டை வாங்க போட்டி போட்டுக் கொண்டு வரிசையில் நிற்கின்றனர். ஆரம்ப காலத்தில் இருந்தே விஜய் சேதுபதியின் திரைப்படங்கள் தனி கவனத்தைப் பெற்று வருகிறது. அதிலும் குறிப்பாக நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்.

காமெடி கலந்து திரில்லர்
இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்தில் கதையின்படி விஜய் சேதுபதிக்கு தலையில் மிடில் ஆப்லிகென்டாவில் அடிபட்டு சமிபத்தில் நடந்தது அனைத்தையும் மறந்து விடுவார். ஏற்கனவே திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இந்த விஷயத்தை மறைத்து எப்படி திருமணத்தை நடத்தி முடிக்கிறார்கள் என்பதை காமெடி கலந்து திரில்லர் பாணியில் சுவாரசியமாக கூடியிருந்த இந்த படம் 2012ல் வெளியாகி பட்டையை கிளப்பியது.
Recommended Video

6 மொழிகளில்
இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக காயத்ரி சங்கர் நடித்திருக்க நண்பர்களாக வினேஷ்வரன், பகவதி பெருமாள், ராஜ்குமார் ஆகியோர் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார்கள். வெறும் 80 லட்சத்தில் எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் 18 கோடி ரூபாய் வசூல் செய்து பாக்ஸ் ஆபீஸை தெறிக்க விட்டது. தமிழில் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தெலுங்கு கன்னடம்,ஒரியா, மராத்தி, மலையாளம், குஜராத்தி உள்ளிட்ட 6 மொழிகளில் இந்த திரைப்படம் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் ஹிட்டடித்தது.

ஹர்பஜன் சிங் ஹீரோவாக
இந்த நிலையில் பஞ்சாபி மொழியில் இப்படம் ரீமேக் செய்யப்பட உள்ளது ஹீரோவாக கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஹர்பஜன் சிங் ஏற்கனவே தமிழில் பிரெண்ட்ஷிப் என்ற படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமாகிறார். இப்பொழுது விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் திரைப்படத்தின் பஞ்சாபி ரீமேக்கில் நடிக்க இருப்பது எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











