இது ஃபன் கேம்.. சந்தானத்துடன் டிக்கிலோனா ஆட சென்னை வந்துள்ள சி.எஸ்.கே சிங்கம்!

சென்னை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் நடிக்க சென்னை வந்துள்ளார்.

ஹீரோ, டாக்டர் என சிவகார்த்திகேயனை வைத்து மிகப்பெரிய படங்களை தயாரித்து வரும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் தயாரிப்பில் சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் உருவாகி வருகிறது.

கடந்த அக்டோபர் மாதமே சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் மூலம் முதன்முறையாக தமிழ் சினிமாவுக்கு ஹர்பஜன் சிங் அறிமுகமாகிறார் என்ற அறிவிப்பு வெளியாகி சினிமா ரசிகர்களையும், சி.எஸ்.கே ரசிகர்களையும் உற்சாகப்படுத்தியது. இந்நிலையில், சென்னைக்கு மூட்டை முடிச்சைக் கட்டிக் கொண்டு நடிக்க ஹர்பஜன் சிங் வந்துள்ளார். ஹர்பஜன் சிங்குடன், நடிகர் சந்தானம் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

பிளாக் ஷீப் டீம் ஏமாற்றம்

பிளாக் ஷீப் டீம் ஏமாற்றம்

டிக்கிலோனா படத்திற்காக சென்னைக்கு நடிக்க வரும் ஹர்பஜன் சிங்கை வைத்து பிளாக் ஷீப் டீம் ஒரு நிகழ்ச்சியை பிளான் செய்திருந்தது. ஆனால், ஹர்பஜன் சிங் பிளாக் ஷீப்பின் அந்த நிகழ்வில் கலந்து கொள்ள முடியாமல் போனதால், இயக்குநர் சேரனை வைத்து பிளாக் ஷீப்பின் அடுத்த 6ஐ ஆர்.ஜே. விக்னேஷ்காந்த் நடத்தி முடித்தார்.

சந்தானத்துடன் ஹர்பஜன்

கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் சந்தானத்துடன் ஹர்பஜன் சிங் முக்கியமான கதாபாத்திரத்தில் டஃப் கொடுத்து நடிக்கவுள்ளார். அதற்காக சென்னைக்கு வந்த ஹர்பஜன் சிங், சந்தானம் மற்றும் டிக்கிலோனா படக்குழுவினருடன் சந்தித்த புகைப்படத்தை கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் பதிவிட்டு வைரலாக்கி வருகிறது.

ஏற்கனவே

ஏற்கனவே

ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தின் மூலம் அறிமுகமாகிறார். ஆனால், முன்னதாக முஜ்சே ஷாதி கரோகி படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார். மேலும், பாஜி இன் ப்ராப்ளம் மற்றும் செகண்ட் ஹஸ்பண்ட் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

இயக்குநர் கார்த்திக் யோகி இயக்கத்தில் சந்தானம் மூன்று கெட்டப்புகளில் நடிக்கவுள்ள டிக்கிலோனா படத்தில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர், சி.எஸ்.கே. சிங்கம் ஹர்பஜன் சிங் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு களமிறங்குகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X