ஐபிஎல் கிரிக்கெட் கொண்டாட்டம்...மீண்டும் 'வாத்தி கம்மிங்'கை பிரபலமாக்கிய ஹர்பஜன் சிங்
சென்னை : பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங், இந்தி படங்களைத் தொடர்ந்து தமிழ் படங்களிலும் நடிக்க துவங்கி விட்டார். தமிழில் இவர் 'ஃபிரண்ஷிப்' என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமாகிறார்.

இந்த படத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான லாஸ்லியா ஹீரோயினாக நடிக்கிறார். இவர்களுடன் அர்ஜூன், சதீஷ் உள்ளிட்டோரும் நடிக்கிறார்கள். சமீபத்தில் இப்படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு, பலரின் பாராட்டையும் பெற்றது.
இந்த படத்தின் ப்ரோமோவிற்காக, விஜய் நடித்த 'மாஸ்டர்' படத்தில் இடம்பெற்ற 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு, வேட்டி-சட்டையில் ஹர்பஜன் சிங் நடந்து வருவது போன்ற வீடியோ ஒன்று வெளியிடப்பட்டது. இந்த வீடியோ வைரலானது.கிரிக்கெட் வீரர்கள், பாலிவுட் மற்றும் கோலிவுட் பிரபலங்கள் பலரும் 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடிய வீடியோ வைரலான நிலையில், தற்போது ஹர்பஜன் சிங்கும் தனது நண்பருடன் இணைந்து 'வாத்தி கம்மிங்' பாடலுக்கு நடனமாடி உள்ளனர்.
ஐபிஎல் கிரிக்கெட் தொடங்க உள்ளதை கொண்டாடுவதற்காக இந்த வீடியோவை ஹர்பஜன் வெளியிட்டுள்ளார். இந்த வீடியாவும் தற்போது வைரலாகி 5 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளை பெற்றுள்ளது. அத்துடன் தென்னிந்தியாவின் அடுத்த ரஜினிகாந்த், ஹர்பஜன் தான் என கருத்து பதிவிட்டுள்ளனர்.


Click it and Unblock the Notifications











