செம சிக்ஸர்.. பிரெண்ட்ஷிப் படத்துல ஹர்பஜன் சிங், லாஸ்லியாவுக்கு என்ன ரோல் தெரியுமா?

சென்னை: ஹர்பஜன் சிங், லாஸ்லியா நடிப்பில் உருவாகி வரும் பிரண்ட்ஷிப் படத்தில் இருவரும் என்ன ரோலில் நடித்து வருகின்றனர் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Kavin ghost Stories | #Throwback | Lock Down Diaries

ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா என இரட்டை இயக்குநர்கள் இணைந்து இயக்கி வரும் படம் பிரண்ட்ஷிப்.

இந்த படத்தில். ஹர்பஜன் சிங், லாஸ்லியா, அர்ஜுன், சதீஷ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர்.

கிரிக்கெட் வீரர்

கிரிக்கெட் வீரர்

இந்திய கிரிக்கெட் அணி வீரர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான நம்ம தமிழ் புலவர் ஹர்பஜன் சிங், கோலிவுட்டில் ஹீரோவாக பிரண்ட்ஷிப் படத்தின் மூலம் என்ட்ரி கொடுக்க உள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் நடிக்க சென்னை வந்த ஹர்பஜன் சிங்குக்கு பிரண்ட்ஷிப் படத்தின் கதை பிடித்துப் போகவே ஓகே சொல்லி உள்ளார்.

சின்னத்திரை டு சினிமா

சின்னத்திரை டு சினிமா

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் கலந்து கொண்டு பிரபலம் ஆன லாஸ்லியாவும் இந்த படத்தின் மூலம் நாயகியாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். இலங்கை செய்தி வாசிப்பாளரான லாஸ்லியாவுக்கு அடுத்து அடுத்து ஜாக்பாட்டுகள் அடித்து வர, கோலிவுட்டில் பல பட வாய்ப்புகளும் குவிந்து வருகின்றன.

என்ன ரோல்

என்ன ரோல்

இயக்குநர்கள் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் இந்த பிரண்ட்ஷிப் படம் கல்லூரி கதையாக உருவாகி வருகிறது. இதில், ஹர்பஜன் சிங் மற்றும் லாஸ்லியா காலேஜ் ஸ்டூடன்ஸ் ஆக நடித்து வருகின்றனர். ஆக்‌ஷன் கிங் அர்ஜுனுக்கு சஸ்பென்ஸ் கலந்த வில்லன் ரோல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாமே இருக்கு

எல்லாமே இருக்கு

பள்ளி படிப்புடன் மேல் படிப்பை தொடர முடியாமல் தவித்து வரும் வட மாநில இளைஞர் ஹர்பஜன் சிங், கோயம்புத்தூரில் உள்ள கல்லூரி ஒன்றில், கால தாமதமாக சேர்ந்து படிக்கிறார். அங்கு நடக்கும் அரசியல், விளையாட்டு என எல்லா கமர்ஷியல் மசாலாவும் கலந்து பிரண்ட்ஷிப் படம் உருவாகி வருகிறதாம்.

பாதி ஓவர்

பாதி ஓவர்

கொரோனா பாதிப்பு காரணமாக லாக்டவுன் அறிவிப்பதற்கு முன்பாக பிரண்ட்ஷிப் படத்தின் 50 சதவீத ஷூட்டிங் முடிந்துள்ளதாக அந்த படத்தின் இயக்குநர்களில் ஒருவரான ஜான் பால் தெரிவித்துள்ளார். மேலும், ஏப்ரல் மாதத்தில் அடுத்த கட்ட படப்பிடிப்பை தொடங்க இருந்த படக்குழு கொரோனா லாக்டவுனால் ஷூட்டிங்கை தள்ளிப் போட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சரி சமம்

சரி சமம்

ஹர்பஜன் சிங்குக்கு சரி சமமாக நடிகை லாஸ்லியாவுக்கும் இந்த படத்தில் ரோல் இருப்பதாகவும், அறிமுக படம் என்றாலும், தனது அசத்தலான நடிப்பால், அதிகளவில் டேக்குகள் எடுத்துக் கொள்ளாமல் நடித்து அசத்துகிறார் லாஸ்லியா என்றும் இயக்குநர் ஜான் பால் லாஸ்லியாவை புகழ்ந்துள்ளார். கொரோனா பாதிப்பு முடிந்தால், எவ்வளவு சீக்கிரம் படத்தை முடித்து ரசிகர்களுக்கு கொடுக்க முடியுமோ கொடுக்கத் தயாராக இருக்கிறாராம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X