லாஸ்லியாவுடன் ஃபிரண்ட்ஷிப்...முதல் படத்தின் டீசரை வெளியிட்ட ஹீரோ ஹர்பஜன் சிங்
சென்னை : தான் நடிக்கும் ஃபிரண்ட்ஷிட் படத்தின் முதல் டீசரை கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் வெளியிட்டுள்ளார். விளையாட்டை மையமாகக் கொண்ட இந்த படத்தில் ஹர்பஜன் சிங் தான் ஹீரோ.

3 மொழிகளில் தயாராகும் ஃபிரண்ட்ஷிப் படத்தை ஜான் பால் ராஜ் மற்றும் ஷம் சூர்யா ஆகியோர் இயக்க உள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து ஏற்கனவே சென்னையில் ஒரு நாள் 2, அக்னி தேவி ஆகிய படங்களை இயக்கி உள்ளனர்.
முஜ்சே ஷாதி கரோகி, செகண்ட் ஹேண்ட் ஹஸ்பண்ட் ஆகிய படங்களில் சிறப்பு தோற்றங்களில் இதற்கு முன் நடித்த ஹர்பஜன் சிங், தமிழில் கார்த்திக் யோகி இயக்கிய டிக்கிலோனா படத்தில் துணை நடிகராக நடித்துள்ளார்.
தற்போது முதல் முறையாக ஹீரோவாக ஃபிரண்ட்ஷிட் படத்தின் மூலம் அறிமுகமாக உள்ளார். இப்படத்தில் பிக்பாஸ் தமிழ் சீசன் 3 பிரபலம் லாஸ்லியா மரியநேசன் ஹீரோயினாக நடிக்க உள்ளார். இந்த படத்தில் அர்ஜூன், சதீஷ் ஆகியோர் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு டி.எம்.உதயகுமார் இசை அமைக்கிறார்.
ஹர்பஜன் டீசருடன், எனது படத்தின் அட்டகாசமான, விறுவிறுப்பான டீசர் இதோ. அனுபவிங்கள் நண்பர்களே என குறிப்பிட்டுள்ளார்.
இந்த டீசரில் ஹர்பஜன் சிங், கோபக்கார இளைஞராகவும், தன்னம்பிக்கை மிகுந்த அறிமுக வீரராகவும் காட்டப்படுகிறார். டீசரிலேயே இந்த படம் ஆக்ஷன், ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவை கலந்த படம் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications











