என்னா குத்து போடறாரு... ஹர்பஜன் சிங்கோட ப்ரெண்ட்ஷிப் படம்... முதல் பாடல் வெளியீடு

சென்னை : ஹர்பஜன் சிங், லாஸ்லியா உள்ளிட்டவர்கள் நடிப்பில் பிரெண்ட்ஷிப் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. 3 மொழிகளில் படம் உருவாகிவரும் நிலையில் 3 மொழிகளிலும் பாடல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார். லிரிக் வீடியோவாக பாடல் வெளியாகியுள்ளது.

பிரெண்ட்ஷிப் படம்

பிரெண்ட்ஷிப் படம்

கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், அர்ஜூன், பிக்பாஸ் புகழ் லாஸ்லியா, சதீஷ் உள்ளிட்டவர்களின் நடிப்பில் உருவாகியுள்ள படம் பிரெண்ட்ஷிப். டிஎம் உதயகுமார் இசையமைப்பில் ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இயக்கத்தில் இந்த படம் உருவாகியுள்ளது.

அடுத்தடுத்த தமிழ் படங்கள்

அடுத்தடுத்த தமிழ் படங்கள்

ட்விட்டர் பக்கத்தில் தொடர்ந்து தமிழில் ட்வீட் உள்ளிட்டவற்றை போட்டு ரசிகர்களின் நெஞ்சில் நீங்காத இடம்பிடித்த ஹர்பஜன் சிங், சந்தானத்தில் டிக்கிலோனா படத்திலும் நடித்து வருகிறார். தொடர்ந்து தமிழில் பல படங்களில் அவரை பார்க்க முடியும் என்று எதிர்பார்க்கலாம்.

முதல் பாடல் வெளியீடு

முதல் பாடல் வெளியீடு

இந்நிலையில் பிரெண்ட்ஷிப் படத்தின் முதல் பாடல் லிரிக் வீடியோவாக நேற்றைய தினம் வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் ஹர்பஜன் சிங் பிறந்ததினத்தையொட்டி இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலை தேனிசை தென்றல் தேவா பாடியுள்ளார்.

ஹர்பஜனின் செம குத்து

அடிச்சு பறக்கவிடும்மா என்று துவங்கும் அந்த பாடல் லிரிக் வீடியோவாக வெளியிடப்பட்டாலும், இடையிடையே சில நடன மூவ்மெண்ட்டுகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதில் செம குத்து போடுகிறார் ஹர்பஜன். போகும் போக்கை பார்த்தால் முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுப்பார் போல தெரிகிறது.

இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தியில் உருவாகி வரும் நிலையில் 3 மொழிகளிலும் இந்த சிங்கிள் வெளியாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X