காரில் கடத்தப்பட்ட லாஸ்லியா..குற்றவாளி ஹர்பஜன் சிங்..வெளியானது ஃப்ரெண்ட்ஷிப் படத்தின் ஸ்னீக் பீக்

சென்னை : பிக் பாஸ் லாஸ்லியா மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் தமிழ் சினிமாவில் அறிமுகமாகும் திரைப்படம் ஃப்ரெண்ட்ஷிப்.

Recommended Video

Harbhajan singh ஒரு நல்ல நடிகர் | Friendship Movie | Producer Stalin interview | Filmibeat Tamil

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையை பற்றிய படமாக இப்படம் உருவாகி உள்ளது.

ட்ரெச்சர் கோலின்ஸ் அரிய நோயால் பாதிப்பு - 6 மாத குழந்தை உயிர்பிழைக்க உதவுங்கள்

செப்டம்பர் 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் அட்டகாசமான ஸ்னீக் பீக் இப்போது வெளியாகி இணையதளத்தில் பட்டையை கிளப்புகிறது.

 பிரண்ட்ஷிப்

பிரண்ட்ஷிப்

சின்னத்திரையில் இருந்து பல நடிகைகள் இப்பொழுது பெரிய திரையிலும் கலக்கிக் கொண்டுள்ளார்கள். அந்த வரிசையில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அறிமுகமான நடிகை லாஸ்லியா இப்பொழுது படங்களில் நடித்து வருகிறார். அறிமுக இயக்குனர்கள் ஜான் பால்ராஜ், ஷாம் சூர்யா இயக்கத்தில் உருவாகியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படத்தில் கதாநாயகியாக லாஸ்லியா நடித்து அறிமுகமாகிறார். இதேபோல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்கும் இந்த படத்தில் ஹீரோவாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார்.

 பாலியல் வன்கொடுமைகள்

பாலியல் வன்கொடுமைகள்

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றிய பல திரைப்படங்கள் வெளியாகிக் கொண்டே இருந்தாலும் தினம்தோறும் இது பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த வகையில் ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படமும் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் பற்றி ஆணித்தரமாக பேச உள்ளது.

செப்டம்பர் 17

செப்டம்பர் 17

இத்திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகும் என எதிர் பார்க்கப்பட்டது ஆனால், இப்பொழுது செப்டம்பர் 17ம் தேதி நேரடியாக திரையில் வெளியாகிறது. காமெடி நடிகர் சதீஷ் இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து இருக்க கேபிஆர் மற்றும் ஸ்டாலின் படத்தை இணைந்து தயாரித்துள்ளனர்.

 அட்டகாசமான ஸ்னீக் பீக்

அட்டகாசமான ஸ்னீக் பீக்

கல்லூரி கதைக்களமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் இன்னும் ஓரிரு வாரத்தில் வெளியாக இருக்கும் நிலையில் தற்போது அட்டகாசமான ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி இணையதளத்தை கலக்கிக்கொண்டு உள்ளது.

 காரில் கடத்தி செல்கிறார்கள்

காரில் கடத்தி செல்கிறார்கள்

ஃப்ரெண்ட்ஷிப் படத்தில் இருந்து தற்போது வெளியாகியுள்ள ஸ்னீக் பீக் காட்சியில் ஆரம்பத்திலேயே மூன்று வசதி படைத்த குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் இரவில் தனியாக பேருந்துக்காக காத்திருக்கும் ஒரு பெண்ணை காரில் கடத்தி செல்கிறார்கள். அது லாஸ்லியா போல தெரிகிறது. அடுத்த காட்சியிலேயே ஆக்ஷன் கிங் அர்ஜுன் அதிரடியாக என்ட்ரி கொடுத்து பெண்களை கடத்தி சீரழிக்கும் அந்த கயவர்களை அடித்து துவைக்கிறார்.

பாஸ்ட்ஃபுட்

பாஸ்ட்ஃபுட்

அடுத்த காட்சியிலேயே பிரஸ் மீட்டில் மாணவர்கள் ஆண், பெண் பாகுபாடு இல்லாமல் ஃப்ரெண்ட்ஷிப் என்ற பெயரில் ஒன்றாக சுற்றித் திரிவதால் தான் இது போன்ற விபரீதங்கள் ஏற்படுகிறது.அப்போது இருந்த காலத்தில் கூட கல்லூரியில் காதல் இருந்தது ஆனால் காதலுடன் சேர்த்து சமூக பொறுப்புணர்வு இருந்தது. ஆனால் இப்போதுள்ள இளைஞர்கள்
பாஸ்ட்ஃபுட் மாதிரி பெண்களை பயன்படுத்துகிறார்கள்.

 குற்றவாளியாக விலங்குடன் ஹர்பஜன்சிங்

குற்றவாளியாக விலங்குடன் ஹர்பஜன்சிங்

இந்த காலத்து இளைஞர்களுக்கு பொறுமையும் இல்லை பொறுப்புணர்வும் இல்லை என கூற குற்றவாளிகளாக கையில் விலங்குடன் ஹர்பஜன்சிங், சதீஷ், ஜே சதீஷ்குமார், ஜெஎஸ்கே, போலீஸ் பேருந்திலிருந்து இறங்குகின்றனர். இவர்களைப் பார்த்த அங்கிருந்தக் கூட்டம் கற்களால் திட்டியபடியே அடிக்கின்றனர் . முதல் ஸ்னீக் பீக்லேயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஃப்ரெண்ட்ஷிப் திரைப்படம் திரையரங்குகளில் ரசிகர்கள் கொண்டாடும் வெற்றித் திரைப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X