வேட்டி கட்டிய ஹர்பஜன் சிங்கின் வாத்தி கம்மிங்...வைரலாகும் வீடியோ

சென்னை : கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், தமிழில் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ஃபிரண்ட்ஷிப். இந்த படத்தின் டீசரை சமீபத்தில் ஹர்பஜன் வெளியிட்டார்.

விளையாட்டை மையமாகக் கொண்ட காதல், காமெடி கலந்த த்ரில்லர் படமான ஃபிரண்ட்ஷிப்பில் ஹர்பஜன், கல்லூரி மாணவராக நடித்துள்ளார். பலரின் வரவேற்பை பெற்ற இந்த டீசர், படத்தின் வீடியோ கிளிப் ஆகியவற்றை ஹர்பஜன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

வாத்தி கம்மிங்

அந்த வீடியோவில், வேட்டி - நீல நிற சட்டை அணிந்து கெத்தாக தனது கும்பலுடன் ஹர்பஜன் சிங் நடந்து வருகிறார். பின்னணியில், விஜய் நடித்த மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற வாத்தி கம்மிங் பாடல் ஒலிக்கிறது.

குவியும் லைக்குகள்

குவியும் லைக்குகள்

வாத்தி கம்மிங் பாடல் ஏற்கனவே டிரெண்டிங் ஆகி உள்ளது. இந்த சமயத்தில் அந்த பாடலுடன் ஹர்பஜன் வெளியிட்டுள்ள இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி, லைக்குகளை அள்ளி வருகிறது. இதுவரை சுமார் 2 லட்சம் பேர் லைக் செய்துள்ளனர்.

லாஸ்லியாவுடன் ஜோடி

லாஸ்லியாவுடன் ஜோடி

ஃபிரண்ஷிட் படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக பிக்பாஸ் புகழ் லாஸ்லியா நடித்துள்ளார். இவர்கள் இருவரும் ஹீரோ - ஹீரோயினாக அறிமுகமாகும் முதல் படம் இது. இந்த படத்தில் சதீஷ், அர்ஜூன் ஆகியோரும் நடித்துள்ளனர்.

3 மொழிகளில் டப் ஆகிறது

3 மொழிகளில் டப் ஆகிறது

ஜான் பால் ராஜ் - ஷாம் சூர்யா இணைந்து நடிக்கும் இந்த படம் கன்னடம், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் டப் செய்யப்பட உள்ளது. இந்த படத்திற்கு ஹர்பஜன் சிங்கின் ரசிகர்கள், கிரிக்கெட் நண்பர்கள் ஆகியோர் சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X