கிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு.. இப்போ சந்தானத்துடன் டிக்கிலோனா ஆட ரெடியான ஹர்பஜன் சிங்!

Recommended Video

Harbhajan Singh & Irfan Pathan in Tamil Movie | கிரிக்கெட் போர் அடிச்சுடுச்சு இப்போ Start Act

சென்னை: கே.ஜே.ஆர் ஸ்டூடியோஸ் தயாரிப்பில் நடிகர் சந்தானம் நடித்து வரும் புதிய படத்திற்கு டிக்கிலோனா என பெயரிட்டுள்ளனர்.

தற்போது, இந்த படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங் இணைந்துள்ளார்.

ஐபிஎல் போட்டிகளின் போது தமிழில் ட்வீட்களை போட்டு தமிழ் மக்கள் மனங்களை கொள்ளையடித்த ஹர்பஜன் சிங் தற்போது தமிழ் படத்தின் மூலம் சினிமாவுக்குள் நுழைகிறார்.

கிரிக்கெட் டு சினிமா

கிரிக்கெட் டு சினிமா

தனது சுழல் பந்து வீச்சால் பல முறை இந்திய கிரிக்கெட் அணிக்கு வெற்றி வாகை சூடி தந்தவர் ஹர்பஜன் சிங். 1998ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகமான ஹர்பஜன் சிங், கடந்த ஐபிஎல் போட்டி வரை சென்னை அணிக்காக ஆடியுள்ளார். தற்போது இரண்டாவது இன்னிங்ஸாக சினிமாவில் கால் பதிக்கிறார்.

தமிழில் ட்வீட்

தமிழில் ட்வீட்

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடி வரும் ஹர்பஜன் சிங்குக்கு தமிழ் மீது பற்று அதீதம். தமிழ் ரசிகர்களை கவரும் விதமாக ஐபிஎல் விளையாட்டுகளின் போது ரஜினி, அஜித், விஜய் உள்ளிட்ட நடிகர்களின் பஞ்ச் டயலாக்குகளை தமிழில் ட்வீட் செய்து அசத்தியுள்ளார்.

இது வேற ஆட்டம்

இது வேற ஆட்டம்

கிரிக்கெட் வீரராக உலகப் புகழ் பெற்றுள்ள ஹர்பஜன் சிங், சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் அறிமுகம் ஆகிறார். ஜெண்டில்மேன் படத்தில் நடிகர் செந்தில் தான் டிக்கிலோனா விளையாடுவார். கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த பாஜி, இப்போ சந்தானத்துடன் சேர்ந்து டிக்கிலோனா ஆட ரெடியாகி விட்டார்.

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர்கள்

தமிழ் சினிமாவில் கிரிக்கெட் வீரர்கள்

அஜய் ஞானமுத்து இயக்கும் விக்ரம் 58வது படத்தில் வேகப்பந்து வீச்சாளர் இர்பான் பதான் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல கார்த்திக் யோகி இயக்கும் சந்தானத்தின் டிக்கிலோனா படத்தில் ஹர்பஜன் சிங் இணைந்துள்ளார். ஒரே நேரத்தில் இரண்டு கிரிக்கெட் ஜாம்பவான்கள் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X