லாஸ்லியா படத்தில் இணைந்த சதீஷ்.. ஹர்பஜன் போட்ட ட்வீட்.. அந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா இடிக்குதே?

சென்னை: பிக்பாஸ் லாஸ்லியா மற்றும் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் பிரண்ட்ஷிப் படத்தில், நடிகர் அர்ஜுன் மற்றும் காமெடி நடிகர் சதீஷ் இணைந்துள்ளனர்.

சந்தானத்தின் டிக்கிலோனா படத்தைத் தொடர்ந்து, ஹர்பஜன் சிங் நாயகனாக நடிக்கும் படம் பிரண்ட்ஷிப்.

இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பிக்பாஸ் சீசன் 3ல் போட்டியாளராக கலந்து கொண்ட லாஸ்லியா நடித்து வருகிறார்.

ஹர்பஜன் சிங்

ஹர்பஜன் சிங்

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், வட இந்தியாவை தொடர்ந்து தமிழ் சினிமாவிலும் கால் பதித்துள்ளார். சந்தானம் நடிப்பில் உருவாகி வரும் டிக்கிலோனா படத்தில் அவருடன் இணைந்து நடித்து வரும் ஹர்பஜன், ஜான் பால் ராஜ் மற்றும் ஷாம் சூர்யா இணைந்து இயக்கும் பிரண்ட்ஷிப் படத்தில் நாயகனாக அறிமுகமாகிறார்.

லிஸ்ட் பெருசாப் போகுது

இந்த படத்தில் ஹர்பஜனுக்கு ஜோடியாக பிக்பாஸ் லாஸ்லியா நடிக்கிறார் என்ற செய்தி சமீபத்தில் வைரலான நிலையில், நேற்று இந்த படத்தில் ஆக்‌ஷன் கிங் அர்ஜுன் இணைந்தார். இந்நிலையில், தற்போது கமெடி நடிகர் சதீஷ், பிரண்ட்ஷிப் படத்தில் இணைந்துள்ளார். அதன் அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது.

தமிழ் புலவர்

தலைவர் 168 படத்தில் நடித்து வரும் நடிகர் சதீஷ், ஹர்பஜன் - லாஸ்லியா காம்போவில் உருவாக உள்ள பிரண்ட்ஷிப் படத்தில் இணைந்துள்ளார். தனது ட்விட்டர் பக்கத்தில், "நம் சென்னை ஐபிஎல்-ன் தமிழ் புலவர் ஹர்பஜன் சிங்குடன் இணைவது மகிழ்ச்சி" என கிண்டலாக பதிவிட, அதற்கு ஹர்பஜன் சிங், வழக்கம்போல் தமிழில் ட்வீட் போட்டு அசத்தியுள்ளார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா

"புது மாப்பிள்ளை சதீஷ், எப்பிடி இருக்கீங்க.. தம்பி நல்லா சிரிச்ச முகம்.. பார்க்க அப்பிடியே ஸ்ரீவல்லிபுத்தூர் பால்கோவா மாதிரி இருக்கீங்க... படத்துல காமெடி கொஞ்சம் தூக்கலா இருக்கட்டும்... நல்லா நெருக்கி செய்வோம்" என ஹர்பஜன் சிங் கொடுத்துள்ள கமெண்ட்டுக்கு நன்றி புலவரே என சதீஷும் பதில் கமெண்ட் போட்டுள்ளார்.

லாஸ்லியா ஃபேன்ஸ்

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சிக்கு பிறகு, நடிகர் ஆரியுடன் ஒரு படத்திலும், ஹர்பஜன் சிங்குடன் ஒரு படத்திலும் நடிக்கும் வாய்ப்பு லாஸ்லியாவுக்கு கிடைத்துள்ளது. இந்நிலையில், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், காமெடி நடிகர் சதீஷ் என நடிகர்கள் லிஸ்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், லாஸ்லியா ரசிகர்கள் சந்தோஷத்தில் மிதக்கின்றனர்.

லாஸ்லியாவுக்கு ரூட்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் தீவிர ரசிகரான காமெடி நடிகர் சதீஷ், பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்த விவாதங்களிலும், கலந்து கொண்டுள்ளார். அதனை குறிப்பிட்டு கமெண்ட் செய்துள்ள இந்த ரசிகர், அப்பவே நினைச்சேன், லாஸ்லியாவுக்கு ரூட் விடும் போதே, குட் லக் ப்ரோ என வாழ்த்தியுள்ளார். இப்போதான்யா அவருக்கு கல்யாணம் ஆகிருக்கு.. பார்த்து செய்யுங்க!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X