எல்லியை பிரிந்த ஹர்திக் பாண்டியாவுக்கு நடிகை இஷா குப்தா மீது காதல்
Recommended Video

மும்பை: கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தற்போது நடிகை இஷா குப்தாவை காதலித்து வருகிறார்.
கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியாவும் பாலிவுட் நடிகை எல்லி அவ்ரமும் காதலித்து வந்தனர். இருவரும் ஜோடியாக ஊர் சுற்றினார்கள். இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் அவர்கள் பிரிந்துவிட்டனர்.
அதன் பிறகு பாண்டியாவுக்கு பாலிவுட் நடிகை இஷா குப்தா மீது காதல் வந்துள்ளது.

இஷா
சமூக வலைதளங்களில் தனது நிர்வாண மற்றும் அரை நிர்வாண புகைப்படங்களை வெளியிடுவதற்கு பெயர் போனவர் இஷா குப்தா. அவரும், பாண்டியாவும் காதலிப்பது குறித்து சமூக வலைதளங்களில் பேச்சாக உள்ளது. மேலும் அவர்களின் காதல் விவகாரம் கடந்த வார இறுதியில் டிரெண்டிங்கில் இருந்தது. அந்த அளவுக்கு மக்கள் பாண்டியாவின் புதுக் காதல் பற்றி தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளனர்.

திருமணம்
பாண்டியாவும், இஷாவும் தங்கள் காதலை ரகசியமாக வைக்க நினைத்தும் முடியவில்லை. இந்நிலையில் பாண்டியாவும், இஷா குப்தாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தகவல்கள் வெளியாகின. இது குறித்து இஷா குப்தாவிடம் கேட்டதற்கு அவர் தனது காதலை மறுக்கவில்லை. மேலும் திருமணம் பற்றியும் விளக்கம் அளித்துள்ளார்.

எதிர்காலம்
நான் திருமணம் செய்யும்போது அனைவருக்கும் நிச்சயம் சொல்வேன். ரகசியமாக திருமணம் செய்ய மாட்டேன். மேலும் நான் தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளப் போவது இல்லை. என் கெரியரில் கவனம் செலுத்த விரும்புகிறேன் என்று பேட்டி அளித்துள்ளார் இஷா. பாண்டியாவுடனான காதல் குறித்த கேள்விக்கு அவர் பதில் அளிக்கவில்லை என்றாலும் மறுக்கவும் இல்லை.

சந்திப்பு
எல்லி அவ்ரமை பிரிந்த பாண்டியா பார்ட்டி ஒன்றில் இஷா குப்தாவை சந்தித்துள்ளார். பார்த்தவுடனேயே இருவருக்கும் பிடித்துப் போய்விட்டது. யாருக்கும் தெரியாமல் ரகசியமாக லன்ச், டின்னருக்கு சென்று வருகிறார்கள். முதலில் ஒருவரையொருவர் புரிந்து கொள்ள விரும்புகிறார்களாம். அதன் பிறகே காதலை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என்று நினைக்கிறார்களாம். கிரிக்கெட் வீரர் ஒருவர் பாலிவுட் நடிகையை காதலிப்பது புதிது அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications