ஹரியோட சிறப்பான கம்பேக்.. யானை படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்.. இதோ ட்விட்டர் ரிவ்யூ!

ஹரியோட சிறப்பான கம்பேக்.. யானை படத்திற்கு குவியும் பாசிட்டிவ் விமர்சனங்கள்.. இதோ ட்விட்டர் ரிவ்யூ!

Recommended Video

Yaanai Public Review | Arun Vijay | Dirctor Hari *Kollywood

சென்னை : ஹரி -அருண் விஜய் கூட்டணியில் இன்றைய தினம் யானை படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

இந்தப் படத்தில் கிராமத்து கெட்டப்பில் அருண் விஜய் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாகியுள்ளார் பிரியா பவானி சங்கர்.

இந்தப் படம் சிறப்பான அளவில் ரசிகர்களையும் விமர்சகர்களையும் கவர்ந்து தற்போது வெற்றிகரமாக ஓடி வருகிறது.

ஹரி -அருண் விஜய் கூட்டணி

ஹரி -அருண் விஜய் கூட்டணி

இயக்குநர் ஹரி மற்றும் நடிகர் அருண் விஜய் மாமா -மச்சானாக இருந்தபோதிலும் இருவரும் இதுவரை இணைந்து படம் செய்ததில்லை. இந்நிலையில் இவர்கள் இருவரும் முதல்முறையாக இணைந்துள்ள படம் யானை. தன்னுடைய சேவல், சிங்கம் தலைப்புகளை தொடர்ந்து இந்த யானை படத்தின் டைட்டிலை எடுத்துள்ளார் ஹரி.

சிறப்பான எதிர்பார்ப்பு

சிறப்பான எதிர்பார்ப்பு

இவர்களின் முதல் கூட்டணி என்பதால் படத்திற்கு சிறப்பான எதிர்பார்ப்பு காணப்பட்டது. படத்தின் ட்ரெயிலர், டீசர், பாடல்கள் உள்ளிட்டவை முன்னதாக வெளியான நிலையில் இன்றைய தினம் படம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது. படத்தில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் லீட் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ஹரியின் சிறப்பான கம்பேக்

ஹரியின் சிறப்பான கம்பேக்

மேலும் சமுத்திரக்கனி, ராதிகா, ராஜேஷ், அம்மு அபிராமி, போஸ் வெங்கட் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் திரைக்கதையை சிறப்பாக அமைத்துள்ளார் ஹரி. கடந்த சில படங்களில் அவர் சொதப்பிய நிலையில், இந்தப் படத்தில் மீண்டும் சிறப்பான கம்பேக்கை கொடுத்துள்ளதாக விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

சிறப்பான கமர்ஷியல் படம்

சிறப்பான கமர்ஷியல் படம்

யானை சிறப்பான கமர்ஷியல் படமாக வெளியாகியுள்ளதாகவும் படத்தின் ஒவ்வொரு இடத்திலும் அருண் விஜய் ஆக்ஷன் மற்றும் எமோஷனல் காட்சிகளில் சிறப்பாக ஸ்கோர் செய்வதாகவும் மேலும் படம் குறித்து ட்விட்டரில் பாராட்டு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பான திரைக்கதை என்றும் பாராட்டுக்கு உள்ளாகியுள்ளது படம்.

மீண்டு(ம்) வந்த நாயகன்

மீண்டு(ம்) வந்த நாயகன்

நாயகன் மீண்டும் வரான் என்று ரசிகர்கள் படத்தின் இயக்குநர் ஹரிக்கு சர்ட்டிபிகேட்டும் கொடுத்துள்ளனர். படத்தில் ராதிகா மற்றும் அம்மு அபிராமியின் கேரக்டர்களும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன. கடந்த 20 ஆண்டுகளாக தன்னுடைய ஆக்ஷன் படங்கள் மூலம் ரசிகர்களுக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்துவரும் ஹரி, இந்தப் படம்மூலம் மீண்டும் தன்னை நிரூபித்துள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான்

சிங்கம் எப்போதுமே சிங்கம்தான் என்றும் ஹரி குறித்து ரசிகர்கள் டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்து வருகின்றனர். மேலும் இது 100 சதவிகிதம் ஹரியின் படமாக வெளியாகியுள்ளதாகவும் கூறியுள்ளனர். மேலும் டைரக்டர் ஹரியை ட்விட்டர் ட்ரெண்டிங் ஆக்கியுள்ளனர். இந்தப் படம் சர்வதேச அளவில் 1500 திரையரங்குகளில் ரிலீசாகியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X