ஐட்டம் நீ அப்படித்தான் அனுப்புவ.. லாஸ்லியாவை பார்த்து ஜம்ப் கட்ஸ் ஹரி இப்படி மோசமா பேசுறாரே!

சென்னை: யூடியூப் பிரபலங்கள் பலர் சினிமாவில் எப்படியாவது ஹீரோவாகிவிட வேண்டும் என முட்டி மோதி வருகின்றனர். ஆனால், பெரிதாக அவர்களால் சினிமாவில் சாதிக்க முடியாமல் போகிறது. பரிதாபங்கள் கோபி சுதாகர் ஒரு படத்துக்கு ரெண்டு படம் எடுத்து இன்னமும் வெளியே விட முடியாமல் தவித்து வருகின்றனர்.

மைக் செட் ஸ்ரீராம் ஹீரோவாகவும் ஒரு படத்தில் கமிட்டாகி நடித்து சில வருடங்கள் ஆகிறது. அந்த படமும் என்ன ஆனது என்றே தெரியவில்லை. பிளாக்‌ஷீப் டீம் தயாரிப்பில் ராஜ்மோகன் இயக்கத்தில் பிளாக்‌ஷீப் நடிகர்கள் நடித்து வெளியான பாபா பிளாக்‌ஷீப் படமும் ஃப்ளாப் ஆனது.

losliya mr house keeping

அந்த வரிசையில் ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலை நடத்தி வந்த ஹரி பாஸ்கர் ஒற்றை ஆளாக பல கெட்டப்புகளை போட்டு பல வருடங்கள் ரசிகர்களை சிரிக்க வைத்து வந்தவர் லாஸ்லியாவுடன் இணைந்து நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ்கீப்பிங் படம் இந்த வாரம் திரைக்கு வருகிறது. அதன் புதிய டிரெய்லரில் லாஸ்லியாவை பார்த்து அவர் ஐட்டம் என சொல்லும் வசனத்தை சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் வெளுத்து வாங்கி வருகின்றனர்.

ஜம்ப் கட்ஸ் டு மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங்: யூடியூப் சேனலில் பிரபலமாக ஏகப்பட்ட இளைஞர்கள் வீடியோக்களை உருவாக்கி தனி சேனல்களை தொடங்கி அப்லோடு செய்து ரசிகர்களை சிரிக்க வைத்து வருகின்றனர். பல வருடங்கள் முன்பாக ஜம்ப் கட்ஸ் யூடியூப் சேனலை தொடங்கி ஒரே ஆளாக அத்தனை கெட்டப்பையும் போட்டு ஜம்ப் கட் எடிட்டிங் மூலம் பக்காவான ஸ்க்ரிப்ட்களை கொடுத்து ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் தான் ஹரி பாஸ்கர். அவர் ஹீரோவாக நடித்துள்ள மிஸ்டர் ஹவுஸ் கீப்பிங் திரைப்படம் குடியரசு தினத்தை முன்னிட்டு வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருகிறது. அந்த படத்தின் டிரெய்லர் தற்போது சோஷியல் மீடியாவில் சில வசனங்களுக்காக சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

losliya mr house keeping

பிக் பாஸ் ரயான்: பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக உள்ளே நுழைந்து கடைசியாக ஓட்டப்பந்தயத்தில் 2 லட்சம் பணப்பெட்டியை எடுத்துக் கொண்டு அசத்திய ரயானும் இந்த படத்தில் செகண்ட் ஹீரோவாக நடித்துள்ளார். ஹரி பாஸ்கருக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு பிக் பாஸ் லாஸ்லியா ரயானை காதலிப்பது போன்ற காட்சிகள் எல்லாம் பிக் பாஸ் ரயான் ரசிகர்களுக்கான ட்ரீட்டாகவே உள்ளது.

ஐட்டம் நீ அப்படித்தான் அனுப்புவ: இளைஞர்களை கவரும் விதமாக உருவாகியுள்ள இந்த படத்தின் டிரெய்லரில் ஒரு நாள் குட்டியா கவுன் போட்டுக் கொண்டு ஒரு போட்டோ அனுப்புனியே, அதை எல்லாருக்குமா அனுப்புன என லாஸ்லியாவை பார்த்து ஹரி பாஸ்கர் கேட்க, அதற்கு ஆமாம் என லாஸ்லியா பதில் அளிக்க, "ஐட்டம் நீ அப்படித்தான் அனுப்புவ" என காதலிக்கும் பெண்ணை பார்த்து ஹரி பாஸ்கர் பேசும் வசனத்தை கண்டித்து சோஷியல் மீடியாவில் நெட்டிசன்கள் இன்னமும் இவனுங்க திருந்தவே மாட்டானுங்க போல என்றும் எதுக்கு? என ஹரி பாஸ்கர் ஸ்டைலிலேயே கமெண்ட்டுகளை குவித்து வருகின்றனர். ஹீரோவாக ஹரி பாஸ்கர் வெற்றி பெறுவாரா? லாஸ்லியா நடிப்பில் வெளியான பிரெண்ட்ஷிப், கூகுள் குட்டப்பா உள்ளிட்ட படங்கள் ஃபிளாப் ஆன நிலையில், அவருக்கு இந்த படமாவது கை கொடுக்குமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X