சிங்கம் 4 நிச்சயம் பண்ணுவோம்! - இயக்குநர் ஹரி

By Shankar

சிங்கம் படத்தின் தொடர்ச்சியாக அதன் நான்காவது பாகத்தை நிச்சயம் பண்ணுவோம் என்று இயக்குநர் ஹரி தெரிவித்தார்.

ஹரி இயக்கத்தில் சூர்யா, ஸ்ருதி ஹாசன், அனுஷ்கா நடித்து வெளியான படம் சி 3 (சிங்கம் மூன்றாம் பாகம்).

பொதுவாக தமிழ் சினிமா இயக்குநர்கள் இரண்டாம் பாகம், மூன்றாம் பாகம் என்று கூறிக் கொண்டு, முந்தைய பாகத்துக்கு சம்பந்தமில்லாத கதைகளை எடுப்பார்கள். ஆனால் ஹரி உண்மையிலேயே முந்தைய பாகங்களின் தொடர்ச்சியைப் படமாக்கினார்.

சிங்கம் படத்தின் முதல் இரு பாகங்களும் வெற்றிப் பெற்றதால் சூர்யா - இயக்குநர் ஹரி கூட்டணியில் உருவான சி 3 படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு உருவானது. இந்தப் படம், பிப்ரவரி 9 அன்று வெளியானது.

hari singam

இந்தப் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வெளியான 6 நாள்களில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. இத்தகவலை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் நடைபெற்ற சிங்கம் 3 படத்தின் தெலுங்குப் பதிப்பு வெற்றி விழாவில் இயக்குநர் ஹரி கூறுகையில், "நானும் சூர்யாவும் இணைந்து நிச்சயமாக சிங்கம் 4 படம் பண்ணுவோம். ஆனால் உடனே அல்ல. அதற்கு எப்படியும் நான்கைந்து வருடங்கள் ஆகும். என்னுடைய அடுத்தப் படம் சாமி படத்தின் இரண்டாம் பாகம்," என்றார்.

More from Filmibeat

Read more about: ஹரி சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X