Hari Hara Veera Mallu X Review: ஹரி ஹர வீர மல்லு படம் எப்படி இருக்கு?.. பவன் கல்யாண் படம் பார்க்கலாமா?
சென்னை: ஏ.எம். ரத்னம் தயாரிப்பில் கிரிஷ் ஜகர்லமுடி இயக்க ஆரம்பித்து, அதன் பின்னர் அவர் வெளியேறிய நிலையில், படத்தை ஜோதி கிருஷ்ணா நிறைவு செய்து வைத்தார். பல ஆண்டுகள் கால தாமதத்திற்கு பிறகு இன்று வெளியாகி இருக்கும் ஹரி ஹர வீர மல்லு படத்தை பார்த்த தெலுங்கு ரசிகர்கள் ட்விட்டரில் படத்துக்கு கலவையான விமர்சனங்களை கொடுத்து வருகின்றனர்.
பவன் கல்யாண் ஃபேன்ஸ் பிளாக்பஸ்டர் என்றும் பவன் கல்யாணின் ஹேட்டர்ஸ் டிசாஸ்டர் என்றும் சோஷியல் மீடியாவில் ரிவ்யூ சண்டையே போட்டு வருகின்றனர். பவன் கல்யாண், நிதி அகர்வால், பாபி தியோல், சத்யராஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ஹரி ஹர வீர மல்லு படம் குறித்து நெட்டிசன்கள் வெளியிட்டுள்ள ட்விட்டர் விமர்சனங்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

டைட்டில் கார்டே தெறிக்குது: உலகளவில் இந்த படத்துக்கு பெரிதாக வரவேற்பு இல்லை என்றாலும் டோலிவுட் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு உருவாகியிருக்கிறது. கடைசி வரை இந்த படத்துக்கு பவன் கல்யாண் ப்ரோமோஷன் செய்ய மாட்டார் என நினைத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஆந்திராவின் துணை முதல்வரான பவன் கல்யாண் அவரே களத்தில் இறங்கி ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகளிலும் பிரஸ்மீட்களிலும் பங்கேற்று பேசிய நிலையில், FDFS கொண்டாட்டம் களைகட்டுகிறது. அதிலும், பவன் கல்யாணின் டைட்டில் கார்டுக்கு ரசிகர்கள் தியேட்டரில் வெறித்தனம் காட்டியுள்ள வீடியோக்களும் வைரலாகி வருகின்றன.
பிளாக்பஸ்டர்: வின்டேஜ் பவன் கல்யாண் பீஸ்ட் மோடில் நடித்துள்ளார். ஹரி ஹர வீர மல்லு சத்தமாக கர்ஜிக்கிறது. படம் கண்டிப்பாக பிளாக்பஸ்டர் தான். பவன் கல்யாண் ரசிகர்களுக்கு ஒரு மெகா விருந்தை படைத்துள்ளனர். கண்டிப்பா மிஸ் பண்ணிடாதீங்க என இந்த ரசிகர் தெரிவித்துள்ளார்.
ரொம்ப வொர்ஸ்ட்: பவன் கல்யாண் நடிப்பு மட்டும் தான் ஓகே. மற்றபடி முதல் பாதியும் 2வது மீதியும் ரொம்பவே வொர்ஸ்ட்டாக உள்ளது. காட்சிகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்து ஒட்ட வைத்துள்ளது போல ஸ்க்ரீன்பிளே படுமோசமாக உள்ளது. கீரவாணியின் இசையை தவிர இது ஒரு குப்பைப் படம் என இந்த நெட்டிசன் நெகட்டிவ் விமர்சனத்தை கொடுத்துள்ளார்.
கலவையான விமர்சனங்கள்: பவன் கல்யாண் வீர மல்லு எனும் போராளியாக நடித்துள்ளார். கோஹினூர் வைரத்தை அவுரங்கசிப்பிடம் இருந்து மீட்டுக் கொண்டு வரும் கதையாக இந்த படம் உருவாகியிருக்கிறது. ஆக்ஷன் மற்றும் எமோஷன் காட்சிகளில் பவன் கல்யாண் படத்தை தாங்கிப் பிடிக்கிறார். மேக்கிங்கில் பல குறைகள் உள்ளதாக கலவையான விமர்சனங்கள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











