மீண்டும் சூர்யாவுடன் கைகோர்க்கும் ஹரி.. சிங்கம் 3-ம் பாகமா?
விஷாலின் பூஜை படத்துக்குப் பிறகு, மீண்டும் சூர்யாவுடன் கை கோர்க்கிறார் இயக்குநர் ஹரி.
பூஜை படம் தீபாவளிக்கு வெளியாவதையொட்டி, இயக்குநர் ஹரி இன்று சென்னையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர் கூறுகையில், ‘பூஜை' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கும் படத்தை இயக்கவிருக்கிறேன். அவரிடம் 2 கதைகள் சொல்லியிருக்கிறேன். அதில் அவர் எதை தேர்வு செய்வார் என்று தெரியவில்லை. இப்படம் ‘சிங்கம்' படத்தின் மூன்றாம் பாகமாக இருக்குமா? என்பதை இப்போதே சொல்ல முடியாது," என்றார்.

ஏற்கெனவே சூர்யா-ஹரி கூட்டணியில் ‘சிங்கம்', ‘சிங்கம்-2' ஆகிய படங்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகின. மேலும் ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகம் எடுக்கவும் தான் தயார் என்று ஹரி கூறியிருந்தார்.
ஆனால் அவர், விஷாலை வைத்து ‘பூஜை' படத்தை இயக்க ஆரம்பித்தார்.
பூஜைக்குப் பிறகு மீண்டும் சூர்யாவுடன் இணைய முடிவு செய்திருக்கும் ஹரி, இந்த படத்தை ‘சிங்கம்' படத்தின் 3-ம் பாகமாக எடுக்கவும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தக் கேள்விக்கு அவர் நேரடியாக பதில் கூறவுமில்லை.


Click it and Unblock the Notifications











