27 வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்ட நடிகர்.. தூக்கில் தொங்கியபடி சடலமாக மீட்பு!

கேரளா: மலையாள நடிகரான ஹரி முரளி தனது வீட்டில் தூக்கில் தொடங்கியபடி சடலமாக மீட்கப்பட்டார். அவருக்கு வயது 27. அவரது உடலை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

நடிகை ஹரி முரளி தனது ஆறாவது வயதில், லால் ஜோஸ் இயக்கிய 'ரசிகன்' திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். முதல் படத்திலேயே திலீப்புடன் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து அண்ணன் தம்பி படத்தில் மம்முட்டியுடன் நடித்தார் குழந்தை நட்சத்திரமாக ஹரி முரளி, 'ஈ பட்டணத்தில் பூதம்', 'அண்ணன் தம்பி', 'தி டான்', '2 ஹரிஹர் நகர்' , 'பிரமுகன்' , 'உலகம் சுற்றும் வாலிபன்' மற்றும் 'மடாம்பி' என சுமார் 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். இவர் நாடகக் கலைஞரும், நடிகருமான கே.ஏ. முரளி மற்றும் பிரசன்னா ஆகியோரின் மகன் ஆவார்.

Malayalam actor death

நடிகர் ஹரி முரளி: மலையாளத் திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாக ஜொலித்த ஹரி முரளி, தனது படிப்பில் கவனம் செலுத்துவதற்காகத் திரைப்படங்களிலிருந்து சிறிது காலம் விலகியிருந்தார். இதையடுத்து, ஹரி 2015 ஆம் ஆண்டு வெளியான 'அமர் அக்பர் அந்தோணி' திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரையுலகிற்குத் திரும்பினார்; அப்படத்தில் இவர் நடிகர் பிருத்விராஜின் தம்பியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல், திரைப்படத் துறையில் 'விஷுவல் எஃபெக்ட்ஸ்' (VFX) கலைஞராகப் பணியாற்றி வந்தார்.

சடலமாக மீட்கப்பட்டார்: இந்நிலையில், கண்ணூர் மாவட்டத்தின் பையனூரில் உள்ள தனது வீட்டில், மார்ச் 12ந் தேதியான நேற்று தூக்கில் தொடங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அவருக்கு வயது 27. அவரது உடலை மீட்ட போலீசார், உடற்கூறு ஆய்வுக்காக பையனூரில் உள்ள பேபி மெமோரியல் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோனை அறிக்கை வந்த பிறகே, அவரின் மரணத்திற்கான காரணம் குறித்து தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்துக் போலீசார் சம்பவ இடத்தில் தீவிரமாக விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.மன அழுத்தம், தனிமை போன்ற காரணங்களால் தற்கொலை எண்ணம் தோன்றினால், சினேகா தற்கொலை தடுப்பு மையம்: 044-24640050 / 044-24640060 (24 மணிநேரமும் செயல்படும்) இந்த எண்ண தொடர்பு கொண்டு பேசவும்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X