»   »  ஹரிகுமாரின் "டபுள் ஆக்ட்".. மதுரை மணிக்குறவன்.. ஜோடியாக மாதவி லதா

ஹரிகுமாரின் "டபுள் ஆக்ட்".. மதுரை மணிக்குறவன்.. ஜோடியாக மாதவி லதா

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: மதுரை மணிக்குறவன்.. இது ஹரிகுமார் அடுத்து நடிக்கும் புதுப் படம்.

தூத்துக்குடி, மதுரை சம்பவம், திருத்தம், போடி நாயக்கனூர் கணேஷன் போன்ற படங்களில் நடித்துள்ள ஹரிகுமார் தற்போது காதல் அகதி படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் அவர் அடுத்து போலீஸ் அதிகாரியாகவும், மணிக்குறவனாகவும் இரட்டை வேடங்களில் நடிக்கும் படமாகும் இது. இதற்கு மதுரை மணிக்குறவன் என்று பெயரிட்டுள்ளனர். இந்த படத்தை காளையப்பா பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது.

மாதவிலதா

மாதவிலதா

தெலுங்கில் நடித்துக் கொண்டுள்ள மாதவிலதா இந்தப் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி வருகிறார்.

10 படம் நடித்தி முத்து நாயகி

10 படம் நடித்தி முத்து நாயகி

மாதவி லதா தெலுங்கில் பத்துப் படங்களில் நடித்துள்ளாராம். ரொம்ப பிசியான நடிகையாம். இனி தமிழிலும் பிசியாவார் என்று நம்பலாம்.

கோட்டா

கோட்டா

கோட்டா சீனிவாசராவ், பருத்திவீரன் சரவணன், கே.ஜி.காளையப்பன் மூவரும் வில்லன்களாக நடிக்கிறார்கள். மற்றும் பவித்ரா, எம்.எஸ்.பாஸ்கர், மாத்யூ, டெல்லிகணேஷ், ராஜ்கபூர், முத்துகாளை, நெல்லை சிவா, சுஜாதா, அனுமோகன், போண்டாமணி, ஜே.லலிதா ஆகியோர் நடிக்கிறார்கள்.

பாட்டுக்கு 2 பேர்

பாட்டுக்கு 2 பேர்

பாடல்களை நா.முத்துக்குமார், விவேகா ஆகியோர் எழுதியுள்ளனர். சண்டைக் காட்சிகளை ஜாகுவார் தஹ்கம் கவனிக்க, கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கே.ராஜரிஷி.

மதுரை மண்ணின் கதையாம்

மதுரை மண்ணின் கதையாம்

இது மதுரை மண்ணில் வாழ்ந்து மறைந்த மாமனிதன் மதுரை மணிக்குறவனின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவத்துடன் கற்பனையை கலந்து திரைக்கதை அமைத்துள்ளோம்.

பயங்கர பரபரப்பாக இருக்குமாம்

பயங்கர பரபரப்பாக இருக்குமாம்

இது பரபரப்பான திரைக்கதையாக இருக்கும். மதுரை, சென்னை, காரைக்குடி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெறுகிறது என்றார் இயக்குனர்.

English summary
Actor Harikumar is performing dual role in the upcoming film Madurai Manikuravan, directed by Rajarishi.
Please Wait while comments are loading...