10000 பீர் ஓகேவா.. ஹரிஷ் கல்யாணிடம் அப்படி கேட்ட அதுல்யா ரவி.. என்னங்க நடக்குது?
சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாணை டேக் செய்து 10000 பீர் ஓகேவா என நடிகை அதுல்யா ரவி போட்டுள்ள ட்வீட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஹரிஷ் கல்யாணும் பதிலுக்கு தனது கையில் ரோஸ் ஒன்றை வைத்துக் கொண்டு அதுல்யா ரவியை ப்ரோபோஸ் பண்ண துடித்து வருகிறார்.
சமீபத்தில் தான் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் நடந்த நிலையில், இது என்னடா புது கூத்து என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

அமலா பால் உடன் அறிமுகம்
சிந்து சமவெளி படத்தில் நடிகை அமலா பால் உடன் அறிமுகமானவர் தான் நடிகர் ஹரிஷ் கல்யாண். பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான ஹரிஷ் கல்யாண் பியார் பிரேமா காதல் படத்தில் தான் அறிமுகம் ஆனால், நினைத்துக் கொள்ள வேண்டாம். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன்னதாகவே வில் அம்பு, பொறியாளன் என அரை டஜன் படங்களில் ஹரிஷ் கல்யாண் நடித்துள்ளார்.

கோவை பொண்ணு
தமிழ் சினிமாவில் மும்பையில் இருந்தும் கேரளாவில் இருந்தும் ஏகப்பட்ட ஹீரோயின்கள் இறக்குமதி ஆகி வரும் நிலையில், கோவையை சேர்ந்த அதுல்யா ரவி ஹீரோயினாக இளம் நடிகர்களுடன் தொடர்ந்து நடித்து அசத்தி வருகிறார். சாந்தனு உடன் அவர் இணைந்து நடித்த முருகங்கைக்காய் சிப்ஸ் படத்துக்கு ஏகப்பட்ட இளைஞர்கள் ரசிகர்களாக உள்ளனர்.

10000 பீர் வேணுமா
சமீபத்தில் நடிகர் ஹரிஷ் கல்யாணுக்கு திருமணம் நடைபெற்ற நிலையில், ஸ்டார் எனும் படத்தில் இருந்து அவர் விலகினார். அதன் பிறகு நடிக்கவே மாட்டாரா என பேச்சுக்கள் அடிபட்ட நிலையில், டீசல் எனும் புதிய படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அந்த படத்தை ப்ரோமோட் செய்யும் விதமாகத்தான் நடிகை அதுல்யா ரவி பீர் பாட்டில் போட்டோவை ட்வீட் செய்து, ஹரிஷ் கல்யாணை டேக் செய்து 10000 பீர் வேணுமா என கேட்டுள்ளார்.

ரோஸ் டே ஸ்பெஷல்
காதலர் தினத்தை முன்னிட்டு நேற்று ரோஸ் டே கொண்டாடப்பட்ட நிலையில், டீசல் படக்குழு இளைஞர்களை கவரும் விதமாக ப்ரோமோஷன்களை ஆரம்பித்து இருக்கிறது. கையில் ரோஜாப்பூவுடன் லுங்கி கட்டிக் கொண்டு ஹரிஷ் கல்யாண் போஸ் கொடுத்துள்ள போஸ்டரையும் வெளியிட்டு டீசர் படத்தை புதுவிதமாக எளிமையான முறையில் ப்ரோமோட் செய்து வருகின்றனர்.

ஹாட் அப்டேட்
இயக்குநர் சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி வரும் டீசல் படத்தின் ஹாட் அப்டேட் இன்று மாலை வெளியாக உள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் கேங்ஸ்டாராக வேறு நடித்திருக்கிறாராம். ஆனால், போஸ்டர்களை பார்த்தால் அதுல்யாவுடன் ரொமான்ஸ் செய்யவே இவருக்கு நேரம் சரியாக இருக்கும் என்றே தெரிகிறது. வெயிட் பண்ணி பார்ப்போம்!

தோனி படத்தில்
நடிகர் ஹரிஷ் கல்யாண் அடுத்ததாக தோனி தயாரிப்பில் உருவாகி வரும் Lets Getting Married படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக லவ் டுடே ஹீரோயின் இவானா நடித்து வருகிறார். நடிகை நதியா முக்கிய ரோலில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஹரிஷ் கல்யாண் அடுத்து அடுத்து இளம் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்து நடித்து வருவது இளைஞர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











