ஓமணப் பெண்ணே படக்குழு மீண்டும் இணையும் புதிய திரைப்படம்!

சென்னை: நடிகர் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து நடித்த திரைப்படம் ஓமணப் பெண்ணே.

தெலுங்கில் விஜய் தேவரகொண்டா, ரிது வர்மா நடிப்பில் வெளியான இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை அடுத்து தமிழில் ஓமணப் பெண்ணே என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டது.

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றதை அடுத்து இந்த கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஓமணப் பெண்ணே

ஓமணப் பெண்ணே

தமிழ் சினிமாவில் இளம் நடிகராக கலக்கிக் கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியாகும் ஒவ்வொரு திரைப்படமும் தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது அந்த வகையில் சமீபத்தில் வெளியான ஓமணப் பெண்ணே திரைப்படமும் மாபெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது நடிகர் ஹரீஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் முதல் முறையாக இணைந்து இந்தப் படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர்.

அதிகாரப்பூர்வ ரீமேக்

அதிகாரப்பூர்வ ரீமேக்

அறிமுக இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் நேரடியாக டிஸ்னி ப்லஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

கடந்த 2017 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான பெல்லி சூபுளு படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக் தான் ஓமணப் பெண்ணே . தெலுங்கில் விஜய் தேவரகொண்டா மற்றும் ரிது வர்மா இணைந்து நடித்து இருந்தனர். இந்த திரைப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட் வெற்றி பெற்று விஜய் தேவரகொண்டாவின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது

மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது

மீண்டும் இந்த கூட்டணி இணைகிறது

இந்த நிலையில் தமிழில் வெளியான ஓமணப் பெண்ணே திரைப்படமும் அமோக வரவேற்பை பெற்றது. திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்பட்டது பின் நேரடியாக ஓடிடியில் வெளியிடப்பட்டது. இளம் காதலர்களை பற்றியும் நம்பிக்கை இருந்தால் வாழ்க்கையில் பிடித்த தொழிலை செய்து முன்னேறி விடலாம் என்பதை மிகவும் ஆணித்தரமாக கூறியுள்ள இந்த திரைப்படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இந்த கூட்டணி இணைய உள்ளது.

Recommended Video

நானும் வெட்டியா சில வருஷம் இருந்துருக்கேன் | Harish Kalyan Exclusive | Filmibeat Tamil
புதிய காதல் கதையில்

புதிய காதல் கதையில்

புதிதாக காதல் கதை களத்தில் தயாராக உள்ள புதிய திரைப்படத்தை இயக்குனர் கார்த்திக் சுந்தர் இயக்க ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் மீண்டும் ஒரு முறை ஜோடியாக நடிக்கின்றனர். ஓமணப் பெண்ணே படத்திலேயே இந்த ஜோடி அனைவரையும் கவர்ந்தது. இப்பொழுது மீண்டும் புதிய படத்தில் இணைவதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X