அந்த ராசி கூட்டணி... மீண்டும் தொடருது!
சென்னை: தனுசு ராசி நேயர்களை படத்தை தொடர்ந்து அடுத்ததாக புதிய படத்திற்கு ஹரீஷ் கல்யாண் ஒப்பந்தமாகி உள்ளார். இந்த படத்தையும் சஞ்சய் பாரதியே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஹரிஸ் கல்யாண். பியார் பிரேமா காதல் என்ற படத்தில் நடித்து ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றார். இதையடுத்து இஸ்பெடு ராஜாவும் இதய ராணியும் என்ற படத்தில் நடித்தார் இந்த படமூம் ஓரளவு பேசப்பட்டது.

இதையடுத்து, தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்துள்ளார். இப்படம் நாளை திரைக்கு வர உள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைந்துள்ளார், இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாக நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஹரீஷ் கல்யாண் நடிக்கும் அடுத்த படத்தையும் சஞ்சய் பாரதியே இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் இருவரும் இணைந்து தனஞ்செயன் தயாரிக்கும் புதிய படத்திலும் பணிபுரிய உள்ளனர்.
வழக்கமாக காதல், கதைகளுக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்துவரும் ஹரீஷ் கல்யாண்ணுக்கு இப்படம் வேற ஒரு பரிமாணத்தில் இருக்கும் என்று எதிர்பார்கப்படுகிறது. இப்படம் ஒரு சூப்பர் நேச்சுரல் திரில்லர் திரைப்படமாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











