தந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு.. பால சரவணனுக்கு ஆறுதல் சொன்ன பிரபல நடிகர்கள்!
சென்னை: நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தந்தையும் கொரோனா தொற்றுக்கு இன்று பலியாகி உள்ளார். அவருக்கு வயது 60.
டார்லிங், குட்டிப்புலி, ஈஸ்வரன் உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார் பால சரவணன்.
தந்தையை இழந்த பால சரவணனுக்கு திரைத்துறையை சார்ந்த பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காமெடி நடிகர்
விஜய் டிவியில் ஒளிபரப்பான கள்ளிக்காட்டுப் பள்ளிக் கூடம் தொடர் மூலம் அறிமுகமானவர் பால சரவணன். 2013ம் ஆண்டு வெளியான ஈகோ படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்த அவர், அதே ஆண்டு வெளியான சசிகுமாரின் குட்டிப் புலி படத்தில் பப்புவாக நடித்து நகைச்சுவை நடிகராக பிரபலமானார். திருடன் போலீஸ், டார்லிங், வேதாளம், ஈஸ்வரன் மற்றும் களத்தில் சந்திப்போம் என ஏகப்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

தந்தை மரணம்
நகைச்சுவை நடிகர் பால சரவணனின் தந்தை ரங்கநாதன் கொரோனா பாதிப்பு காரணமாக மதுரையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனளிக்காமல் நடிகர் பால சரவணனின் தந்தை காலமானார். அவருக்கு வயது 60.

தங்கையின் கணவர்
கடந்த மாதம் பாலசரவணனின் தங்கையின் கணவர் கொரோனாவுக்கு உயிரிழந்த சோகமான செய்தியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார் நடிகர் பால சரவணன். மேலும், வெறும் 32 வயது தான் அவருக்கு ஆகிறது என்பதையும் தெரிவித்து கொரோனா விழிப்புணர்வையும் ஏற்படுத்தி இருந்தார்.

அலட்சியம் வேண்டாம்
தயவு கூர்ந்து மிக கவணமாக இருக்கவும்...நமக்கெல்லாம் கொரோனா வராது என்று நினைப்பது மாபெரும் கோழைத்தனம்...நம்மை பாதுகாக்க நம்மால் மட்டுமே முடியும்... முக கவசம் அணிவீ்ர்... plss" என மிகவும் உருக்கமாக பால சரவணன் ட்வீட்டும் போட்டிருந்தார். இந்நிலையில், தந்தையையும் அவர் இழந்தது பெரும் சோகத்தை எழுப்பி உள்ளது.

ஹரிஷ் கல்யாண் ஆறுதல்
காமெடி நடிகர் பால சரவணன் தந்தையை இழந்த செய்தியை அறிந்த இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் தனது ட்விட்டர் பக்கத்தில் தான் மிகவும் வருத்தப்படுவதாகவும், என்ன ஆறுதல் உங்களுக்கு சொல்வேன் என்றே தெரியவில்லை நண்பா என பதிவிட்டுள்ளார்.

தாங்க முடியாத இழப்பு
நடிகர் சாந்தனு தனது ட்விட்டர் பக்கத்தில், "தந்தையை இழப்பது தாங்க முடியாத இழப்பு" உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் இப்படியொரு கொடுமை நடந்திருக்கவே கூடாது. மிகவும் வருந்துகிறேன். தைரியமாக இருங்கள் என ஆறுதல் கூறியுள்ளார். மேலும், சில சினிமா பிரபலங்களும் பால சரவணனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர். மாஸ்க் முக்கியம் மக்களே!


Click it and Unblock the Notifications











