பியார் பிரேமா காதல் நாயகனுக்கு இன்று பிறந்த நாள்.. ரசிகைகள்.. திரைப்பிரபலங்கள் வாழ்த்து !

சென்னை : தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் முன்னணி நடிகராகவும் அதிக பெண் ரசிகைகளை கொண்டும் வலம் வருபவர் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

Recommended Video

Dharala Prabhu on Prime | Harrish Kalyan | 49 Sec Challenge | Lock down Diaries

பியார் பிரேமா காதல், தனுசு ராசி நேயர்களே போன்ற படங்களில் நடித்து மிகவும் பிரபலமான இவர் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.

ஜூன் 29 ஆம் தேதியான இன்று இவர் தனது பிறந்த நாளை கொண்டாடி வருவதால் இவருக்கு ரசிகர்கள், நண்பர்கள் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் என அனைவரும் வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

வித்தியாசமான காதல்

வித்தியாசமான காதல்

தமிழ் திரைப்படத்துறையில் இப்போதுள்ள காலகட்டத்தில் பெண்களின் கனவு கண்ணாக வலம் வருபவர்களில் முக்கியமானவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். இவர் தொடர்ந்து தனது ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான காதல் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து அதில் வெற்றியும் கண்டு வருகிறார்.

தயாரிப்பில்

தயாரிப்பில்

இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜா தயாரித்த முதல் படமான பியார் பிரேமா காதல் இவருக்கு மிகப்பெரிய வெற்றியையும், ஹாண்ட்சம் ஹீரோ என்ற அங்கீகாரத்தையும் கொடுத்ததை தொடர்ந்து தமிழ் திரையுலகில் இளம் பெண்களால் மிகவும் ரசிக்கப்பட்டு வரும் காதல் மன்னனாக வலம் வருகிறார்.

பியார் பிரேமா காதல்

பியார் பிரேமா காதல்

ஹரிஷ் கல்யாண் முதன்முதலாக அமலாபாலுடன் சிந்து சமவெளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் திரைத்துறைக்கு அறிமுகம் செய்யப்பட்டார். அதைத் தொடர்ந்து ஒரு சில படங்கள் நடித்து வந்த இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரமும் அடையாளமும் கிடைக்காத நிலையில், பியார் பிரேமா காதல் திரைப்படம் இவருக்கு தமிழ் திரைப்படத்துறையில் நல்ல பெயரை பெற்றுத்தந்தது.

தெலுங்கு ரசிகர்கள்

தெலுங்கு ரசிகர்கள்

இந்த படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் என்ற காதல் படத்தில் நடிக்க இவரை மேலும் பல ரசிகைகள் கூட்டம் பின் தொடர ஆரம்பித்தது. இவ்வாறு தமிழில் தொடர்ந்து படங்களில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாண் தெலுங்கில் நானி நடித்து மிகப்பெரிய பிளாக்பஸ்டர் ஆன ஜெர்சி திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து தன்னை தெலுங்கு திரைப்பட ரசிகர்களிடமும் பிரபலப்படுத்தி கொண்டார்.

இளம் நட்சத்திரங்கள்

இளம் நட்சத்திரங்கள்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் மாறி மாறி படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் சமீபத்தில் நடித்த தாராள பிரபு படம் மிகப்பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து தற்பொழுது இயக்குனர் சிம்புதேவன் இயக்கத்தில் பல இளம் நட்சத்திரங்கள் இணைந்து நடிக்கும் அந்தோலஜி படமான கசடதபற என்ற படத்தில் நடித்து வருகிறார்.

தமிழில் தயாராகி வருகிறது

தமிழில் தயாராகி வருகிறது

ஹரிஷ் தெலுங்கில் விஜய் தேவரகொண்டா நடிப்பில் வெளியாகி சக்கை போடு போட்ட பெல்லி சூபுளு என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் ஹீரோவாக நடித்துக் கொண்டு வருகிறார். இந்தப் படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியடைந்து வசூல் சாதனையை படைத்து விஜய் தேவரகொண்டாவிற்க்கு மிகப் பெரிய அங்கீகாரத்தை கொடுத்ததை தொடர்ந்து தற்போது தமிழில் ஹரீஷ் கல்யாண் நடிப்பில் தயாராகி வருகிறது.

சிம்பு ஃபேன்

சிம்பு ஃபேன்

இவ்வாறு தனது படங்களின் மூலம் அனைவரையும் ரசிக்க வைத்ததன் மூலம் பல ரசிகர்களை நாளுக்கு நாள் பெற்று வரும் ஹரிஷ் கல்யாண் ஒரு தீவிரமான சிம்பு ஃபேன். சிம்புவை மிகவும் ரசிக்கும் இவர் சிம்புவுக்காக பல இடங்களில் பல மேடைகளில் குரல் கொடுத்துள்ளார்.

காதல் மன்னன்

காதல் மன்னன்

இவ்வாறு ஹாண்ட்சம் ஹீரோவாகவும் பல பெண்களின் கனவு கண்ணனாகவும் இருந்து வரும் காதல் மன்னன் ஹரிஷ் கல்யாண் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். ஜூன் 29-ஆம் தேதியான இன்று ஹரிஷ் கல்யாண் தனது பிறந்தநாளை கொண்டாடி வருவதையொட்டி ரசிகர்கள் நண்பர்கள் மற்றும் திரைத் துறையைச் சார்ந்த பல பிரபலங்களும் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். காதல் மன்னனான இவருக்கு குறிப்பாக பெண் ரசிகைகளிடம் இருந்து தான் வாழ்த்துக்கள் குவித்து வருகின்றன

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X