இந்த போட்டோவில் இருக்கும் அந்த சின்னக் குழந்தை யாரு தெரியுமா? இப்போ அழகான ஹீரோவா இருப்பவர் தான்!

சென்னை: அன்னையர் தினத்தை முன்னிட்டு பல முன்னணி நடிகைகள் தங்கள் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தனர்.

நடிகைகள் மட்டும் தான் அம்மா போட்டோக்களை ஷேர் செய்து அன்னையர் தினத்தை கொண்டாட வேண்டுமா என்ன? நாங்களும் போடுவோம் என பிரபல இளம் ஹீரோ ஒருவரும் தனது அம்மாவுடன் தான் கைக்குழந்தையாக இருக்கும் போட்டோவை பகிர லைக்குகள் குவிந்து வருகின்றன.

 Harish Kalyan childhood photo with his mother goes trending

அந்த ஹீரோவுக்கு தோனியுடன் ஒரு சூப்பர் கனெக்‌ஷன் இருக்கு.. இப்போவாவது கண்டு பிடித்து விட்டீர்களா? ஆம் நம்ம ஹரிஷ் கல்யாண் தான் அந்த குட்டிப் பையன்.

அன்னையர் தினம்: ஆண்டுதோறும் அன்னையர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டும் அன்னையர் தினத்தை முன்னிட்டு பல முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகள் தங்கள் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை பகிர்ந்து வாழ்த்துக்களை கூறினர்.

நடிகை நிரோஷா, கீர்த்தி சுரேஷ், அதா சர்மா, ஹனி ரோஸ் உள்ளிட்ட பல நடிகைகளும் நடிகர்களும் அன்னையர் தினத்துக்கு சூப்பரான வாழ்த்துக்களை பதிவிட்டனர்.

 Harish Kalyan childhood photo with his mother goes trending

அம்மாவுடன் ஹரிஷ் கல்யாண்: அமலா பால் உடன் சிந்து சமவெளி படத்தில் அறிமுகமான ஹரிஷ் கல்யாண் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பியார் பிரேமா காதல், தாராள பிரபு என ஏகப்பட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து வருகிறார்.

இந்நிலையில், தனது அம்மாவுடன் எடுத்துக் கொண்ட த்ரோபேக் புகைப்படத்தை அன்னையர் தினத்தை முன்னிட்டு பதிவிட்டு "என் உலகம் நீ தான்! எல்லா அம்மாக்களும் தெய்வங்கள் தானே!" என சூப்பரான கேப்ஷனை கொடுத்து அன்னையர் தின வாழ்த்துக்களை கூறியுள்ளார்.

 Harish Kalyan childhood photo with his mother goes trending

தோனி பட ஹீரோ: பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு வெர்ஷன் 2.0வாக சூப்பரான படங்களில் அழகான ஹீரோவாக நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் கிரிக்கெட் வீரர் தோனி தயாரிப்பில் உருவாக உள்ள முதல் படமான Let's Get Married படஹ்ட்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். லவ் டுடே படத்தில் ஹீரோயினாக நடித்த இவானா இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்து வரும் நிலையில், நதியா, யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர்.

தோனியின் LGM படம் மட்டுமில்லாமல் நூறு கோடி வானவில், டீசல் மற்றுல் லப்பர் பந்து உள்ளிட்ட படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார் ஹரிஷ் கல்யாண்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X