என்னது..ஹரிஷ் கல்யாணுடன் பிரியா பவானி சங்கர் காதலா?..கசிந்தது லவ் மேட்டர்!

சென்னை : ஹரிஷ் கல்யாண், பிரியா பவானி சங்கர் உடன் கொஞ்சிக் குலாவி பார்க்கில் உட்கார்ந்து கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்று இப்பொழுது வைரலாகி வருகிறது.

இருவரும் தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது இந்த புகைப்படம் வெளியாகி பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கசடதபற, பெல்லி சூபுளு தமிழ் ரீமேக் உள்ளிட்ட திரைப்படங்களில் இவர்கள் இருவரும் இணைந்து நடித்து வரும் நிலையில் இப்போது வெளியாகியிருக்கும் இந்த புகைப்படம் ரசிகர்களை ஒருவேளை லவ் மேட்டரா இருக்குமோ என யோசிக்க வைத்துள்ளது.

ரசிகர் கூட்டத்தை உருவாக்கி

ரசிகர் கூட்டத்தை உருவாக்கி

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் மற்றும் பிரியா பவானி சங்கர் தங்களுக்கான தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கின்றனர்.

ரசிகர்களின் பேராதரவை

ரசிகர்களின் பேராதரவை

சமீபத்தில் ஹரிஷ் கல்யாண் நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல் இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் திரைப்படங்கள் இவருக்கு பெண் ரசிகைகளை உருவாக்கிய நிலையில் அதைத்தொடர்ந்து தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றி பெற்றன.

செம பிஸியாக

செம பிஸியாக

சின்னத்திரை நடிகையாக இருந்து இப்போது வெள்ளித்திரையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் பிரியா பவானி சங்கர் சீரியல் நடிக்கும் போதிலிருந்தே தனக்கான பெரும் ரசிகர் கூட்டத்தை கொண்டிருந்ததை அடுத்து இப்பொழுது பல்வேறு திரைப்படங்களில் செம பிஸியாக நடித்து வருகிறார்.

மிக நெருக்கமாக

மிக நெருக்கமாக

இந்நிலையில் இவ்விரு இளம் பிரபலங்களும் இணைந்து இரண்டு திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருவதால் இவர்கள் இருவரும் மிக நெருக்கமாக பழகி வருகின்றனர்.

தமிழ் ரீமேக்கில்

தமிழ் ரீமேக்கில்

விஜய் தேவரகொண்டா நடிப்பில் தெலுங்கில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "பெல்லி சூபுளு " என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் பிரியா பவானி சங்கர் ஹரிஷ் கல்யாணம் நடித்து வரும் நிலையில் இப்பொழுது ஹரிஷ் கல்யாண் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்ட பதிவு ஒன்று ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடைசியாக எங்களுக்கு மகிழ்ச்சி

கடைசியாக எங்களுக்கு மகிழ்ச்சி

இருவரும் பார்க்கில் உட்கார்ந்துகொண்டு கொஞ்சிக் குலாவி இருவரின் கைகளையும் இருக்கமாக பிடித்தவாறு காதலர்கள் போல இருக்கும் இந்த புகைப்படத்தை ஹரிஷ் கல்யாண் தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து "கடைசியாக எங்களுக்கு மகிழ்ச்சி" என ஆனந்தத்துடன் இரண்டு ஹார்ட் சிம்பளையும் போட்டு விட்டுள்ளார்.

உன்னால வெயிட் பண்ண முடியலல

உன்னால வெயிட் பண்ண முடியலல

இதைப்பார்த்த ரசிகர்கள் பலரும் ஓஹோ கதை அப்படி போகுதா, ஒருவேளை காதலாக இருக்குமோ என யோசித்து வரும் நிலையில் "லாக்டவுன் முடியிற வரைக்கும் உன்னால வெயிட் பண்ண முடியலல" என பிரியா பவானி சங்கர் அதற்கு பதிலளிக்க இது காதல் விவகாரமா இல்லை இவர்கள் இணைந்து நடித்து வரும் திரைப்படத்திற்கான ப்ரமோஷனா என ரசிகர்கள் பலரும் யோசித்தபடியே அடுத்த அப்டேட்டுக்காக காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X