ஹனிமூன் போகாமல் போட்டோஷூட் நடத்திய ஹரிஷ் கல்யாண்..ஹீரோயின் போல டக்கரா இருக்காங்களே!
சென்னை : நடிகர் ஹரிஷ் கல்யாண் திருமணம் முடிந்த கையோடு தனது காதல் மனைவியுடன் டக்கராக போஸ் கொடுத்துள்ளார்.
சிந்து சமவெளி என்ற படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்த ஹரிஷ் கல்யாண் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து பிரபலமான நடிகராக இருக்கிறார்.
சித்து சமவெளி படத்திற்கு பிறகு அரிது அரிது, சட்டப்படி குற்றம், சந்தா மாமா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

ஹரிஷ் கல்யாண்
தமிழில் ஒரு சில படங்களில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த ஹரிஷ் கல்யாணுக்கு தெலுங்கில் பட வாய்ப்புகள் வந்ததால் டோலிவுட் சென்றார். இதையடுத்து கடந்த 2017 ஆம் ஆண்டு விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 1 இவருக்கு மாபெரும் அறிமுகத்தை கொடுத்தது. வைல்ட் கார்ட் என்ட்ரி மூலம் 2 வது நாளில் உள்நுழைந்த இவர் 98 நாட்கள் வீட்டில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்தார்.

பியார் பிரேமா காதல்
இந்த நிகழ்ச்சிக்கு பின் ரைசா வில்சனுடன் பியார் பிரேமா காதல் என்னும் படத்தில் நாயகனாக நடித்தார். இந்த படம் இளசுகள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. யுவன் சங்கர் ராஜா தயாரித்த இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண் காதல் மன்னனாக இளசுகளில் மனதில் இடம் பிடித்தார். அதன் பின் தனுசு ராசி நேயர்களே, தாராள பிரபு, கசடதபற , ஓ மண பெண்ணே உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை வைத்து இருக்கிறார்.

ஹரிஷ் கல்யான் திருமணம்
தற்போது ஹரிஷ் கல்யாண் 100 கோடி வானவில், நட்சத்திரம், டீசல் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த படங்கள் விரையில் வெளியாக உள்ள நிலையில், தனது திருமணம் குறித்த அறிவிப்பை வெளியிட்டு பெண்ணின் புகைப்படத்தை இன்ஸ்டாவில் ஷேர் செய்திருந்தார். இதையடுத்து, நேற்று முன்தினம் திருவேற்காட்டில் உள்ள ஒரு மஹாலில் ஹரிஷ் கல்யாணின் திருமணம் தடல்புடலாக நடந்தது.

டக்கரா இருக்காங்க
இதையடுத்து,தனது காதல் மனைவி நர்மதா உதயக்குமாருடன் விதவிதமான போடோஷூட் எடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலர் அட ஹீரோயின் போல சும்மா டக்கரா இருக்காங்க என்றும், ஹனிமூன் போகாமல் போட்டோஷூட் நடத்துறீங்களே என்று கேட்டு வருகின்றனர். திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் ஹரிஷ் கல்யாணுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











