twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கொரோனா பாதிப்பு.. நீளும் உதவிக் கரம்.. ஹரிஷ் கல்யாண் எவ்வளவு நிதி அளித்துள்ளார் தெரியுமா?

    |

    சென்னை: கொரோனாவால் சினிமா படப்பிடிப்புகள் ரத்தாகி உள்ள நிலையில் சினிமா தொழிலாளர்களுக்கு உதவும் வகையில் நடிகர் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் ரூபாய் நிதி வழங்கியுள்ளார்.

    Recommended Video

    பிரபலங்கள் கைதட்டி ஆரவாரம் | Janata Curfew | Celebrity Clapping

    உலகம் முழுவதும் சுமார் 4 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உயிரிழந்தோ எண்ணிக்கை 17 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    Harish Kalyan donates 1 lakh rupees for FEFSI workers!

    கொரோனா வைரஸ் தமிழ்நாட்டில் பரவாமல் தடுக்க இன்று மாலை முதல் மாநிலம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    கொரோனா வைரஸ் காரணமாக தென்னிந்திய சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், FEFSI ஊழியர்கள் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளனர்.

    அவர்களுக்கு உதவும் வகையில், நடிகர் ரஜினிகாந்த் 50 லட்சம் ரூபாயை நிதியாக அளித்துள்ளார்.

    நடிகர்கள் சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி உள்ளிட்டோர் தலா 10 லட்சம் ரூபாயை ஃபெப்ஸி தொழிலாளர்களுக்கு நிதியுதவி செய்துள்ளனர்.

    நடிகர் பிரகாஷ் ராஜ், 150 அரிசி மூட்டைகளை சினிமா தொழிலாளர்களுக்கு வழங்கியுள்ளார்.

    இவர்களின் வரிசையில் பியார் பிரேமா காதல், தாராள பிரபு உள்ளிட்ட பல படங்களில் நடித்து வரும் இளம் நாயகன் ஹரிஷ் கல்யாண், FEFSI தொழிலாளர்களை சந்தித்து ஒரு லட்சம் ரூபாயை நன்கொடையாக அளித்துள்ளார்.

    English summary
    Dharala Prabhu hero Harish Kalyan donates One lakh rupees for FEFSI workers. Earlier Rajinikanth, Vijaysethupathi, Suriya and Sivakarthikeyan donates some more lakhs.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X