நானும் ஒரு லட்சம் தந்திருக்கேன்.. சூர்யா, கார்த்தி வரிசையில் இணைந்த ஹரிஷ் கல்யாண்!

சென்னை: நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி சென்னை வெள்ள நிவாரண நிதிக்கு 10 லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கிய நிலையில், இளம் நடிகர் ஹரிஷ் கல்யாண் 1 லட்சம் நன்கொடை வழங்கி உள்ளார்.

மிக்ஜாம் புயல் சென்னையை சும்மா சூறாவளி காற்று மற்றும் கனமழையால் பந்தாடி விட்டது. பல பகுதிகள் மழை விட்டு இன்னமும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகிறது.

Harish Kalyan donates 1 lakh rupees to CM Cyclone relief fund

திமுக அரசு சரியாக இந்த சூழலை கையாளவில்லை என சில நடிகைகள் மற்றும் சந்தோஷ் நாராயணன், விஷால் உள்ளிட்டோர் குற்றம் மட்டுமே சுமத்தி வரும் நிலையில், சில நடிகர்கள் மக்களுக்கு உதவ முன்வந்து நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

10 லட்சம் நிதியுதவி: நடிகர்கள் ரஜினிகாந்த், விஜய், அஜித் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியிடாத நிலையில், நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இணைந்து 10 லட்சம் ரூபாய் நிதியுதவியை முதலமைச்சர் வெள்ள நிவாரண நிதிக்கு வழங்கினர். இந்நிலையில், இன்னொரு இளம் நடிகரும் தன்னால் இயன்ற தொகையை தற்போது வழங்கி உள்ளார்.

1 லட்சம் கொடுத்த ஹரிஷ் கல்யாண்: நடிகரும் பிக் பாஸ் போட்டியாளருமான ஹரிஷ் கல்யாண் நடிப்பில் இந்த ஆண்டு எல்ஜிஎம் திரைப்படம் தோனி தயாரிப்பில் வெளியானது. ஆனால், அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. கடந்த வாரம் பார்க்கிங் படம் வெளியாகி பாராட்டுக்களை பெற்றது. இந்நிலையில், தன்னால் முடிந்த ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவியை முதல்வர் நிவாரண நிதிக்கு நடிகர் ஹரிஷ் கல்யாண் செக்காக கொடுத்த புகைப்படத்தை தற்போது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பார்க்கிங் வசூல் பாதிப்பு: பாராட்டுக்களை பெற்றாலும், ஹரிஷ் கல்யாணின் பார்க்கிங் திரைப்படம் இந்த புயல் மழை காரணமாக மக்கள் அதிகம் தியேட்டருக்குச் சென்று பார்க்க முடியாத நிலை உருவாகி விட்டது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் மட்டும் தான் படம் ஓடவில்லை என்றாலும் தமிழ்நாடு முழுவதும் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில், பார்க்கிங் தப்பித்து விட்டது என்று தான் கூறுகின்றனர். முன்னணி நடிகர்களே மக்களுக்கு உதவ முன் வர தயங்கி வரும் நிலையில், ஹரிஷ் கல்யாண் உதவ முன் வந்திருப்பதை பார்த்த ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X