இன்று பிக் பாஸ் வீட்டிற்கு வரும் அமலா பால் பட ஹீரோ
சென்னை: பிக் பாஸ் வீட்டிற்கு இன்று புதிதாக மேலும் ஒரு பிரபலம் வருகிறார்.
பிக் பாஸ் வீட்டிற்கு வைல்டு கார்டு மூலம் நடிகை சுஜா வருணி நேற்று வந்தார். இந்நிலையில் இன்று மேலும் ஒரு பிரபலம் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்.
வைல்டு கார்டு மூலம் முதன்முதலாக ஒரு ஆண் வருகிறார்.
பிக் பாஸ்
பிக் பாஸ் சமூக வலைதளங்களில் இருக்கும் ட்ரெண்டுக்கு ஏற்ப நிகழ்ச்சியை மாற்றியமைத்து வருகிறார். ஒரே பெண்களாக வருகிறார்களே என்று நெட்டிசன்கள் கூறியதையடுத்து இன்று ஒரு ஆண் பிக் பாஸ் வீட்டிற்கு வருகிறார்.

பிரபலம்
சுஜா வருணி வந்தபோது ப்ரொமோ வீடியோவில் அவரின் முகத்தை சரியாக காட்டவில்லை. தற்போது இந்த பிரபலமோ சுவர் ஏறிக் குதித்து நன்றாக முகத்தை காட்டியுள்ளார்.

ஹரிஷ் கல்யாண்
பிக் பாஸ் வீட்டிற்கு இன்று வருவது நடிகர் ஹரிஷ் கல்யாண். அமலா பால் நடித்த சிந்து சமவெளி சர்ச்சை படத்தின் ஹீரோ. அமலாவின் ஜோடி ஆவார்.

சினேகன்
பிக் பாஸ் வீட்டு சூழல் தெரிந்த ஹரிஷ் சினேகனிடம் சென்று அவரின் கட்டிப்பிடி வைத்தியம் பற்றி கூறிவிட்டு அவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்துள்ளதாக கூறுகிறார்.


Click it and Unblock the Notifications











