ஹரீஸ் கல்யானுக்கு விஜய் ரசிகர் கொடுத்த பென்சில் ஸ்கெட்ச்
சென்னை : நடிகர் ஹரீஸ் கல்யான் கடைசியாக தனுசு ராசி நேயர்களே படத்தில் நடித்து இருந்தார் .இதற்கு பிறகு தற்போது தாராள பிரபு படத்தில் நடித்து வருகிறார்.
ஹரீஸ் கல்யானுக்கு ரசிகர் ஒருவர் தான் பென்சிலில் வரைந்த ஓவியத்தை பரிசளித்து இருக்கிறார் .அந்த ஓவியத்தின் சிறப்பு என்னவென்றால் தளபதி விஜய் ஹரீஸ் கல்யான் தோல்களில் கை போட்டு இருப்பதனை போல் அந்த ஓவியத்தை வரைந்திருக்கிறார் அந்த ரசிகர் .



தற்போது ஹரீஸ் கல்யான் தாராள பிரபு என்ற படத்தில் நடித்து வருகிறார். இது 2012ல் ஆயுஸ்மான் குரானா நடித்து மாபெரும் வெற்றி அடைந்த விக்கி டோனர் படத்தின் ரீமேக்காகும் மேலும் ஹரீஸ் கல்யான் விஜய் தேவரகொண்டா ஹீரோவாக அறிமுகமாகி அசத்திய பெல்லீ சூப்புலு படத்தின் ரீமேக்கிலும் நடிக்க இருக்கிறார்.
Comments


Click it and Unblock the Notifications