புற்று நோயாளிகளுக்கு உதவிய ஹரிஷ் கல்யாண்.. யூ ஆர் கிரேட் சார் என பாராட்டிய ரசிகர்கள்!
சென்னை: நடிகை பிரியா பவானி சங்கர் உடன் முதன்முறையாக ஹரிஷ் கல்யாண் இணைந்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றிபெற்ற "பெல்லி சூபுளு" என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.
தற்போது உள்ள இளம் நடிகர்களில் அதிக பெண் ரசிகர்களைக் கொண்டுள்ள நடிகர் ஹரிஷ் கல்யாண் ப்யார் பிரேமா காதல் மற்றும் இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் உள்ளிட்ட வெற்றித் திரைப்படங்களை தொடர்ந்து அவரது ரசிகைகள் கூட்டம் பல மடங்கு உயர்ந்துள்ளது.
இவ்வாறு தென்னிந்தியாவின் சாக்லேட் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் ஹரிஷ் கல்யாண் இப்பொழுது புற்றுநோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது அனைவரையும் பாராட்ட வைத்துள்ளது.

மிகவும் பரிச்சயமானவர்
வசீகரிக்கும் முகம், அனைவரையும் கொள்ளை கொள்ளும் அழகு என கோலிவுட்டின் ஹேண்ட்சம் பாயாக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் ஹரிஷ் கல்யாண் தமிழ் மற்றும் தெலுங்கு ரசிகர்களுக்கு மிகவும் பரிச்சயமானவர்.

பல மடங்கு உயர்த்தி
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான பியார் பிரேமா காதல், இஸ்பேட்ராஜாவும் இதயராணியும் உள்ளிட்ட திரைப்படங்கள் இவரது ரசிகைகளின் எண்ணிக்கையை பல மடங்கு உயர்த்தி இருக்கும் நிலையில் இவர் தொடர்ந்து பல்வேறு காதல் கதைகளில் நடித்து வருகிறார்.

முதன்முறையாக பிரியா பவானி சங்கர்
தாராள பிரபு, தனுசு ராசி நேயர்களே உள்ளிட திரைப்படங்கள் கலகலப்பான காமெடி காட்சிகளுடன் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்ற நிலையில் இப்பொழுது முதன்முறையாக நடிகை பிரியா பவானி சங்கர் உடன் இணைந்து தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற "பெல்லி சூபுளு" என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

பாராட்டும் விதமாக
சிம்புதேவன் இயக்கும் அந்தொலஜி திரைப்படமான " கசடதபற" என்ற திரைப்படத்திலும் இவர் நடித்து வருவதை அடுத்து ரசிகர்கள் பலரும் இவரது திரைப்படங்களை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் நிலையில் இப்பொழுது பலரும் பாராட்டும் விதமாக இவர் செய்த செயல் ஒன்று இணையதளத்தில் பலரின் பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

பலரின் பாராட்டுகளையும்
புற்று நோயால் பாதிக்கப்பட்டு கைவிடப்பட்டவர்களை அவர்கள் இறுதி நிமிடங்கள் வரை மிகுந்த அக்கறையுடன் பார்த்துக் கொள்ளும் ஸ்ரீமாதா புற்று நோய் மருத்துவமனை நிறுவனத்தின் விஜயஸ்ரீக்கு தனது பாராட்டுக்களை தெரிவித்தவாறு, அவரின் 8 ஆண்டுகால ஈடு இணையற்ற சேவைக்கு உதவும் வகையில் உதவிக்கரம் நீட்டி ஒரு பெரும் தொகையை அளித்து மகிழ்ச்சி அடைந்ததோடு இப்பொழுது இணையதளத்தின் பலரின் பாராட்டுகளையும் இந்த ஹேண்ட்சம் ஹீரோ பெற்று வருகிறார்.


Click it and Unblock the Notifications











